tamilthehindu : எட்டுவழிச் சாலை வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் என்று
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது பின்னடைவு கிடையாது. அரசு
மேல்முறையீடு செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்த கட்டமாக கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துப்பேசி யாரும் பாதிக்காத அளவு முதல்வர் முடிவெடுப்பார்.
கருத்துக் கணிப்பைத் தாண்டி மக்கள் கணிப்பு போட்டுள்ளனர்.
அவர்கள் கணிப்பு அதிமுகதான். மோடி பிரதமராக வரவேண்டும், தமிழகத்தில் பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தினகரன் கல்லா பெட்டி, பரிசு பெட்டியைதான் கேட்கிறார்.
மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தினகரனுக்கு துளி அளவும் இல்லை. 40 மக்களவைத் தொகுதி, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருப்பதால்தான் ஸ்டாலின் டீ சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். திமுக ஆட்சிபோல் சட்டம்-ஒழுங்கு இருந்தால் அவர் நடக்க முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக