dailyhunt.in : அதிமுக, அமமுக கட்சிகள் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்ற
தேர்தலுக்கு பின் டிடிவி தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைவது உறுதி என்றும், அதற்கு முன் அதிமுக, அமமுக இணைப்பு நடக்க வேண்டும் என்று இன்று புதுவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இணைப்புக்கு பின் பாஜக கூட்டணியில் ஒன்றுபட்ட அதிமுக இருக்கும் என்றும் இதனால் டிடிவி தினகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே அதிமுக, அமமுக இணைப்பு குறித்த ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் முதல்வர்-துணை முதல்வர் பதவியிலும் தினகரனுக்கு எம்பி பதவி மற்றும் மத்திய அமைச்சர் பதவியும் என்கிற ரீதியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக, அமமுக தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் அது திமுகவுக்கு மிகப்பெரிய பலமாகிவிடும் என்றும், இதனை தவிர்க்க இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் இருதரப்பில் உள்ள தலைவர்கள் கூறி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக