ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

சிதம்பரத்தின் சொத்துக்கள் முழு இந்தியாவை விட அதிகம்.. ஆர் எஸ் எஸ் அண்டப்புளுகு ஆகாச புளுகு

வெப்துனியா : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலை இதுவரை ஒரு தமிழ் ஊடகம் கூட வெளியிடாத நிலையில் மலையாள மீடியா ஒன்று இதுகுறித்து பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதுஅந்த பதிவில் சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர், 300 ஏக்கர் நிலம் ஆகியவை ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமாக இருப்பதாகவும், ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ் இருப்பதாகவும், அதுபோக பிரிட்டனில் 88 ஏக்கர் நிலம், 500 ஏக்கர் மருத்துவமனை, குதிரைப்பண்ணை , மற்றும் முந்திரி தோட்டங்கள் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.மேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகின்றன. மேலும் கார்த்திக் சிதம்பரம் பெயரில் பல ரியல் எஸ்டேட் கம்பெனிகள் உலகின் பல நாடுகளில் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகின்றது. காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் தனது வாழ்வின் கடைசி பகுதியில் வறுமையில் வாடிய நிலையில் ஒரு மத்திய அமைச்சருக்கு இவ்வளவு சொத்தா? என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.<

கருத்துகள் இல்லை: