ஞாயிறு, 23 ஜூன், 2019

ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழப்பு ...வீடியோ


நக்கீரன் ; ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 பார்வையாளர்கள் அமர்வதற்காக இரும்பு உத்திரங்களை கொண்டு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாலை சுமார் ஐந்து மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று சரிந்து விழுந்தது. இரும்பு உத்திரங்களும் பெயர்ந்து கீழே சாய்ந்தன.
இதை கண்ட மக்கள் பீதியில் கூச்சலிட்டவாறு உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர்மீது மற்றவர் மோதி நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இந்த விபத்தில் பலியான 14 பேரின் உடல்களை மீட்டனர். 20-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: