சனி, 7 ஜூலை, 2018

முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி கைது. சேலம் எட்டுவழிசாலைக்கு எதிராக மக்களை தூண்டினாராம்

CPM former MLA Balabharati arrested in Arur tamil.oneindia.com - kalai-mathi தருமபுரி: 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி அரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலத்தை கொடுக்க முடியாது என விவசாயிகள் கதறி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் உள்ள காளிப்பேட்டையில் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மணல் இறக்குமதிக்கு அனுமதி.... அடுத்த மாதம் முதல் ... தமிழக அரசு முடிவு!

இறக்குமதி மணல்: தமிழக அரசு முடிவு!மின்னம்பலம்: தமிழகத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படவுள்ளது. 500 கோடி ரூபாய் மதிப்பிலான 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்யப்படுவதற்கான ஒப்பந்தத்தில், தமிழக அரசு விரைவில் கையெழுத்திட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் மணலுக்கான தினசரி தேவை 10 ஆயிரம் யூனிட்டுகள் என்ற அளவிலிருந்து, தற்போது 12 ஆயிரம் யூனிட்டுகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் கட்டுமானப் பணிகளுக்காக நாளொன்றுக்கு 12,000 லோடு முதல் 40,000 லோடு வரை மணல் தேவைப்படுவதாக கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர். ஆனால், பொதுப்பணித் துறையின் குவாரிகளில் இருந்து பெறப்படும் மணல், போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
மணல் சேவையை ஈடு செய்வதற்காக, தமிழகத்தில் எம்-சாண்ட் எனப்படும், செயற்கை மணல் உற்பத்தியைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இலங்கை விமான நிலையத்தை இந்தியா பொறுப்பேற்கிறது ... மகிந்தா ராஜபக்சா சர்வதேச விமான நிலையம்

இலங்கை, இந்தியா, விமான நிலையம்தினமலர்:   "கொழும்பு: : ; இலங்கையில், நஷ்டத்தில் செயல்படும் விமானநிலையம் ஒன்றை, ஏற்று நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
;இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 241 கி.மீ., ஹம்பந்தோட்டா நகரில் உள்ளது மட்டல ராஜபக்சா சர்வதேச விமானநிலையம். கடந்த 2013ல், சீனா வழங்கிய கடன் மூலம் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், போதிய விமானங்கள் இயக்கப்படாததால், உலகிலேயே 'காலியான விமான நிலையம்' என அழைக்கப்படுகிறது.>இந்நிலையில், இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா, பார்லிமென்டில் கூறியுள்ளார்.

அமைச்சர் சரோஜாவும் ஐந்து கோடியும்.. ரெய்டில் சிக்கிய ஆதாரம்...!

sarojaநக்கீரன் -ஜீவாதங்கவேல்   : கிறிஸ்டி பிரைடு" நிறுவனத்தில் நடைபெற்ற இரண்டு நாள் ஐ.டி. ரெய்டு நிறைவுக்கு வந்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும்  சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் முழுக்க சத்துமாவு, பருப்பு மற்றும் சத்துணவுமுட்டை வழங்கி வருகிறது கிறிஸ்டி பிரைடு என்ற நிறுவனம். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டது. முட்டை மற்றும் பருப்பு, மாவு சப்ளையில் ஏராளமான முறைகேடுகளை இந்நிறுவனம் செய்து வந்துள்ளது. இதன் பலனாக பல கோடிகள் குவித்துள்ளது.

வெள்ளி, 6 ஜூலை, 2018

சுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

சவுக்கு : வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ்
சமூக  ;வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது தேசம் பற்றிய புதிய வரைமுறையை உருவாக்கும் அக்கட்சியின் சித்தாந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மதம் மாறி மணம்புரிந்த ஒரு ஜோடியைத் தொந்தரவு செய்த தனது அமைச்சக ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்ததன் பலனாக வலதுசாரி இந்துத்வா அமைப்புகளின் அருவருக்கத்தக்க தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் சுஷ்மா. சிறுபான்மை இனத்தவரைத் திருப்திப்படுத்த முயற்சித்த ‘குற்றச்சாட்டினால்’ அச்சிட முடியாத தகாத வார்த்தைகளில் அவர் ஏசப்படுகின்றார்.
“உங்களது வார்த்தைகள எங்களுக்குத் தாங்க முடியாத வலியைத் தந்து விட்டன” என்ற சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கௌஷலின் பதிலிலிருந்து சுஷ்மாவும் அவரது குடும்பத்தாரும் இம்விமர்சனங்களால் நிலைகுலைந்து போயுள்ளது தெளிவாகிறது. ஜூன் 30 அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய கடும் விமர்சனங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று தன்னைப் பின்பற்றுபவர்களிடம் சுஷ்மா கேட்டிருந்தார்.

ஸ்டாலின் உடனடியாக களம் இறங்கவேண்டும் ! காலம் தாழ்த்தினால் மிகப் பெரிய தவறாகிவிடும்?

LR Jagadheesan : அறிவிக்கப்பட்ட
எமெர்ஜென்ஸியைவிட கொடூரமான
அடக்குமுறை எடப்பாடி என்கிற எடுபிடியின் ஆட்சியில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்திராவின் எமெர்ஜென்ஸியில் அவரது எதிர்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தான் பெருமளவு நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். அரசியல் ஆர்வமற்ற, தொடர்பற்ற சாமானியர்களுக்கான நேரடி பாதிப்புகள் குறைவு என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் காலில் விழுந்தே முதல்வரான அடிமையின் அறிவிக்கப்படாத கொடுங்கோன்மை ஆட்சியிலோ எதிர்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான நேரடி பாதிப்பு என்பது குறைவாகவும் அரசியல் ஆர்வமற்ற, தொடர்பற்ற சாமானியர்களுக்கான நேரடி பாதிப்புகள் அதிகமாகவும் இருக்கின்றன. 
இதை செய்வது அராஜக ஆளும்கட்சி. ஆனால் இந்த பாதிப்புகளை தடுத்து நிறுத்தவேண்டிய அல்லது குறைக்கவேண்டிய முதன்மைக்கடமை எதிர்கட்சியின் செயல் தலைவருக்கானது. 
இத்தனைக்கும் அவர் இந்திராவின் எமெர்ஜென்ஸியின் கொடுங்கோன்மையில் மற்ற யாரையும்விட நேரடியாக அதிகம் பாதிக்கப்பட்டவர். ஒருநாளல்ல. இருநாட்களல்ல. ஓராண்டுக்கும் மேலாக கொடுஞ்சிறையை அனுபவித்தவர். 

பாரதிராஜாவின் மகன் மனோஜ் போதையில் வாகனம், ..

பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு!மின்னம்பலம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று(ஜூலை 6) குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மகால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரும் வரவேற்பு அவருக்குக் கிடக்கவில்லை. தற்போது ரெடி டு சூட் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலேசியா .. மகதிர் மொகமட் : மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது’

THE HINDU TAMIL :  முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் : கோப்புப்படம் முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் அவரால் எந்தவிதத்திலும் எங்களுக்குத் தொந்தரவு இல்லை என்று மலேசியா பிரதமர் மகாதிர் முகம்மது திட்டவட்டமாக இன்று அறிவித்துவிட்டார்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் ஜாகீர் நாயக் மீது இந்திய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) குற்றம்சாட்டித் தேடிவந்தது. மலேசியாவில் இருக்கும் ஜாகீர்நாயக்கை நாடுகடத்த வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதை மலேசிய அரசு நிராகரித்துள்ளது.
முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக் மீது வெறுப்பைத் தூண்டும் பேச்சு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜாகீர் நாயக் மீது வழக்குப் பதிவு செய்தது. அதில் இரு மதக்குழுக்களுக்கு இடையே விரோதத்தை வளர்த்தல் என்ற பிரிவின் கீழ் அவரைத் தேடி வந்தது.

உத்தர பிரதேசம் மாணவியை 3 இளைஞர்கள் காட்டுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் விடியோவும் எடுத்தனர்

வெப்துனியா : உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னா எனும் பகுதியில் ஒரு பெண் 3 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மூன்று வாலிபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்து செல்கின்றனர்.
அந்த பெண் அவர்களிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். ஆனால், அதை ஏற்காமல் அந்த வாலிபர்கள் அவரை இழுத்து செல்கின்றனர்.
இதை மற்றொருவர் மொபைல் போனில் வீடியோவும் எடுக்கிறார்.இந்த வீடியோ வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கங்காகத் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இவர் முதல்வராக பதவியேற்ற பின்பே அங்கு பல்வேறு குற்ற சம்பவங்கள மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலா ...40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்

வெப்துனியா :ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தால் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தர தனுஷ் சம்மதித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான் காலா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
படம் வெளியாக 3வது நாளிலேயே பல தியேட்டர்கள் காத்து வாங்கியது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கருத்து கூறி வந்தனர்.
 இப்படத்தை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகஸ்தர்களிடம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை மட்டும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நஷ்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ரூ.40 கோடி நஷ்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன் மூலம் காலா ஒரு தோல்விப்படம் என்பது உறுதியாகியுள்ளது.

தாய்லாந்து குகை.. 13 பேரை மீட்க கடும் முயற்சி ; கடற்படை வீரர் உயிரழப்பு

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 13 பேரை  மீட்க கடும் முயற்சி  ; கடற்படை வீரர் பலிதினத்தந்தி:  தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 13 பேரை மீட்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஈடுபட்ட கடற்படையைச் சோந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தில் தம் லாங் குகைக்குள் சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வருவதற்கான திட்டங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் வகுத்து வருகின்றனர். அந்த 13 பேரும் ஒரே நேரத்தில் மீட்கப்பட வாய்ப்பு இல்லை எனவும், ஒவ்வொருவரது உடல்நிலையை கருத்தில் கொண்டுத் தனித்தனியாக அழைத்து வரப்படுவார்கள்.குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சகதியில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகே, ஒவ்வொருவரும் குகையிலிருந்து மீட்கப்படுவார்கள்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை

BBC : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் (ஒன்றே முக்கால் கோடி இந்திய ரூபாய்) அபராதமும் விதித்துள்ளது.
அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சஃப்தர் அவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். லண்டனில் உள்ள பல சொத்துக்களையும், எவன்ஃபீல்ட் அடுக்குமாடி குடியிருப்பையும் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உட்கார்ந்துகொண்டே வேலை: சட்டத்தில் திருத்தம்!

உட்கார்ந்துகொண்டே வேலை: சட்டத்தில் திருத்தம்!
மின்னம்பலம்: கேரளாவில், கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்ய முடியும்.
பொதுவாக, நகை மற்றும் துணிக்கடை, ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகளில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே காலையிலிருந்து இரவு வேலை முடியும் வரை கால் கடுக்க நின்றுகொண்டுதான் வேலை செய்ய வேண்டும். வாடிக்கையாளர் இல்லாத சூழ்நிலையிலும் கூட நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். 12 மணி நேரம் நின்றுகொண்டே இருப்பதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அதனால், தாங்கள் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பெண்கள் 2013ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பணிப்பெண் கொலை: தொழிலதிபரின் மனைவி கைது.. பெசன்ட் நகர் முருகானந்தம் ....

பணிப்பெண் கொலை: தொழிலதிபரின் மனைவி கைது!மின்னம்பலம்: சென்னை பெசன்ட் நகரில் வீட்டுப் பணிப்பெண்ணை வெந்நீர் ஊற்றி சித்ரவதை செய்து கொன்ற தொழிலதிபரின் மனைவி உள்பட இரண்டு பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகரில் வசிப்பவர் தொழிலதிபர் முருகானந்தம். காஞ்சிபுரம் அருகே கேஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த இளம்பெண் மகாலட்சுமி (19) இவரது வீட்டில் பணிப்பெண்ணாக ஐந்து வருடத்துக்கும் மேலாக வேலை செய்துவந்தார். மகாலட்சுமிக்குக் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனையில் சேர்க்காமல், செவிலியர் ஒருவரை வரவழைத்து வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளனர். இந்த நிலையில் (ஜூலை 4) புதன்கிழமை மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, சாஸ்திரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, மகாலட்சுமியின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள், சூடு வைத்த காயங்கள் இருந்தன. அவர் உடல்நலக் குறைவால் இறந்தாரா அல்லது பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

கயிலாச யாத்திரை ஆபத்துக்கு விமானங்கள் ... ஆனால் ஓக்கி புயலுக்கு .? அவன் பார்ப்பான் நீ மீனவன்?

Marutha Muthu‎ : அண்ணே கைலாச யாத்திரை போனவங்க அத்தனை பேரும்
பிராமணன்கள்.... மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்....அதனால் விமானங்கள் போயிருக்கின்றன... ஆனால் நமது மீனவர்கள் தமிழர்கள் அவர்கள் பெரும்பாலும் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் உண்மையா இல்லையா ன்னு கேட்டு பாருங்கள் இங்கே மதம் ஜாதி பார்த்து தான் மனித உயிர்க்கு மரியாதை கொடுக்கப் படுகிறது...உதாரணம் sv சேகர் விவகாரம்...மற்றும் மன்சூர் அலிகான் விவகாரம்... உண்மையா இல்லையா ன்னு சொல்லுங்கள் பார்க்கலாம்

சிறை சித்திரவதையில் சமூக ஆர்வலர் முகிலன்!... மல நாற்ற அறை, ரத்தக்கறை போர்வை…

மல நாற்ற அறை, ரத்தக்கறை போர்வை... சிறை சித்திரவதையில் சமூக ஆர்வலர் முகிலன்!விகடன் : பி.ஆண்டனிராஜ்<: br="" nbsp=""> கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முகிலன் பங்கேற்றபோது அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தொடர்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவரைக் கூடங்குளம் போலீஸார் கைது செய்தனர். நிலத்தடி நீர் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று திரும்புகையில், போலீஸார் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்குமாறு நீதிமன்றத்தில் பலமுறை மனு அளித்தும் வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து அவர் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோதே அவரைக் கரூர் மாவட்ட போலீஸார், பழைய வழக்கு ஒன்றில் தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். இந்த நிலையில் அவரை மதுரை சிறைக்கு மாற்றம் செய்து கொடுமைக்கு உள்ளாக்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

நான் கண்ட ரியல் #MGR (abridged )

Srinivasan Radhakrishnan : அப்போது நடைபெற்ற பிரசாரத்திர்க்கு எங்கள் ைக்கிள்களில் பிரசாராம் மேற்கொண்டு அண்ணாநகர் சிந்தாமணியை அடைந்தோம், வட்டத்திலிருந்து 150 பேர் உட்பட  அங்கே ஏற்கனவே ஆயிரத்திற்க்கும் மேலாக கழக உடன்பிறப்புகள் திரண்டு குழுமியிருந்தனர்..
காரணம் கலைஞர் சரியாக மதியம் 1மணிக்கு அங்கே தெருமுனை வாகண பிரசாரம் மேற்க்கொள்ளவிருப்பதாக முரசொலி முதற்கொண்டு அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியிருந்தது..
அந்த சூழலில் அண்ணாநகர் சிந்தாமணிக்கு கலைஞர் வரவேண்டிய நேரத்தில் MGR அங்கே வர குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் தூரத்திலிருந்து வாகணங்கள் வருவதை பார்த்து உற்சாகமடைந்து கலைஞர் வாழ்க திமுக வெல்க என கோஷமிட வந்தது MGR என்றவுடன் MGR ஒழிக கலைஞர் வாழ்க என ஸ்ருதி மாறிய நேரத்தில் MGR பிரசார வேணில் இருந்து வெளிபட்டு இரட்டை விரலை காண்பிக்க ..

அங்கே இருந்த நான் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலைஞர் வாழ்க வெல்க உதயசூரியன் என முழங்கியபடி ஜந்து விரல்களை விரித்து காட்ட அங்கே இரட்டை விரலை உயர்த்த ஒருவருமில்லா நிலையில்..
பிராசார வேணிலிருந்து வெளிவந்த MGR முகம் கோபத்தில் சிவந்தபடி,,

வியாழன், 5 ஜூலை, 2018

உடன் பயணிப்போருக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்!

உடன் பயணிப்போருக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம்!
மின்னம்பலம்: டூவிலரில் செல்பவர்கள் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்,மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பாவானி சுப்பராயன் அமர்வு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) வந்தது. இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக கண்காணிக்கப்பட்டு அதற்கான அபராதம் மற்றும் தண்டனை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

விஜயகாந்த் அமெரிக்காவுக்கு ... மருத்துவ பயணம் .

மின்னம்பலம் : சிகிச்சை பெறுவதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்  நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையிலும் சிங்கப்பூர் சென்றும் சிகிச்சை பெற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், ஒரு வாரகாலம் அங்குள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் மேற்கொண்டார்.
உடல்நலமில்லாத நிலையிலும் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற தேமுதிக செயற்குழுக் கூட்டமும் நடைபெற்ற நிலையில், அதில் பல முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

டெல்லி தற்கொலை: சிசிடிவி காட்சியில் உறுதியானது!

டெல்லி தற்கொலை: சிசிடிவி காட்சியில் உறுதியானது!மின்னம்பலம்: டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 பேர், வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மூட நம்பிக்கையால்தான் அவர்கள் உயிரிழந்ததாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி புராரி பகுதியின் சாண்ட் நகரில், கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 1) ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, ஒருவர் அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். இந்தச் சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்கொலை செய்துகொண்ட இந்தக் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டுப் பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் கடைப்பிடித்துவந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள்ளேயே பல சிறிய கோயில்களைக் கட்டிவைத்து வழிபட்டுவந்திருக்கின்ற

Flashback : எம்ஜியாரின் பினாமியாக இருந்த சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ மனை மற்றும் அறக்கட்டளை ....

savukkuonline.com : ஐஏஎஸ் படித்து விட்டு, கொள்ளையடிக்கும் பூலான் தேவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பூலான் தேவியின் கொள்ளை குறித்த கட்டுரைதான் இது.
ராமச்சந்திரா மருத்துவமனை.  இந்த மருத்துவமனையின் வரலாறு தெரியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.  ராமசாமி உடையார் என்ற சாராய அதிபர் தொடங்கிய கல்லூரி இது.  இவர் மறைந்த எம்.ஜிஆரின் பினாமி.   இன்று தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வித் தந்தைகளுக்கெல்லாம் முன்னோடி.   முதன் முதலில் தனியார் கல்லூரிகளைத் தொடங்கிய ராமசாமி உடையாரும், ஜேப்பியாரும் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பது ஒரு சுவையான ஒத்திசைவு.
இந்த ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி எம்ஜிஆரின் பணத்தால் தொடங்கப்பட்டாலும், எல்லா அயோக்கியர்களையும் போலவே, இவர் கருணாநிதியோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.  கொள்ளையடிப்பவர்கள், ஊழல் பெருச்சாளிகளுக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன ?
ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு)
நாளடைவில், எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்ததை விட, கருணாநிதியோடு மிகுந்த நெருக்கமானது ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம். இந்த நெருக்கம் எந்த அளவுக்கான நெருக்கம் என்றால், பிப்ரவரி 2009ல், ஈழம் தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி.   அவருக்கு முதுகுத்தண்டே இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் அரசியல் சிக்கல்களை சமாளிக்கவே அவ்வாறு சென்று படுத்துக் கொண்டார் என்பதும், அவருக்கு அறுவை சிகிச்சை எதுவுமே நடைபெறவில்லை என்பதுமே உண்மை. இது போன்ற நாடகங்களையெல்லாம் நடத்த முழுக்க ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய அளவுக்கு ராமச்சந்திரா நிர்வாகமும், கருணாநிதியும் நெருக்கம்.

ஸ்டாலின் : ஏழு ஏக்கர் வெறும் 3 3.46 கோடிக்கு தமிழக அரசு .... ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு... சந்தை மதிப்பு 405 கோடி ரூபாய்!

சாராய ராமசாமி உடையார்
tamilthehindu :வீட்டு வசதி வாரியத்துக்கு
சொந்தமான நிலத்தை, ராமச்சந்திரா
அறக்கட்டளைக்கு முறைகேடாக விற்பனை செய்து அரசுக்கு 370 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ராமச்சந்திரா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளைக்கு சென்னை திருவான்மியூரில் மிக முக்கியமான இடத்தில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடிமாட்டு விலைக்கு விற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சந்தை மதிப்பில் 405 கோடி ரூபாய் மதிப்பும், வழிகாட்டுதல் மதிப்பில் 267 கோடி ரூபாயும் உள்ள ஏழு ஏக்கர் நிலம் வெறும் 33.46 கோடி ரூபாய்க்கு விற்று அரசுக்கு ஏறக்குறைய 370 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது தற்போது பத்திரிக்கை செய்திகள் வாயிலாக வெளிவந்திருக்கிறது.

வைரமுத்து மீண்டும் சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து .... பட்டது போதாதா ? கெட்டது போதாதா?

Venkat Ramanujam : உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பேசும் தமிழையும் .,
வெறும் 14135 பேர் (as per 2011 census) மட்டுமே உலகின் பேசும் சமஸ்கிரதமும் ஒரே தளத்தில் வைத்து இரண்டுமே இரு கண்கள் என்கிறாரே வைரமுத்து ...
தமிழ் மொத்தம் ஆறு நாடுகளில் தேசிய மொழி .. அர்எஸ்எஸ் கொண்டாடும் 43 கோடி பேசும் இந்திக்கு கூட இந்த பெருமை கிடையாது ..
2000 ஆண்டுக்கு முன்னால் எழுதிய திருகுறளுக்கு ஈடு இனையாக நான்கு வேதமும் நிச்சயம் கிடையாது ..
தமிழ் சமீபத்தில் கனடா,அஸ்திரிலியா ஆகிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்டு எற்கப்பட்டும் உள்ளது ..
சமீபத்தில் நடந்த #gobackmodi ஹாஷ்டாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் 4 லட்சம் பேர் டிவிட் செய்ய மோடி தமிழ்நாட்டில் கால் பதியாமல் ஒடியதும் சரித்திரம் ஆனாது ..
இப்படி பல பெருமைகளை கொண்ட தமிழுடன் .,இது போல எந்த பெருமையும் அற்ற .,அழிந்து கொண்டு கோமாவில் கிடக்கும் ICU சமஸ்கிரத மொழியுடன் ஒப்பிட்டு பேச ஒரு "பிம்பிளக்கடி பிளாங்கி" அதிசய அற்புத மனநிலை இருக்க தானே வேண்டும் ..

அழகிரி : ஸ்டாலின் செயல்படாத தலைவர் ....திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்..

tamilthehindu : மதுரை : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையை அடுத்த
பாலமேட்டில் இன்று அவரது ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர் . திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்.
செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் உள்ளனர் என்று மு.க.அழகிரி கூறினார்.< ஸ்டாலின் செயல்படாத தலைவர். உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்று மு.க.அழகிரி பேசினார்.
பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்ட அழகிரி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

tamilthehindu : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதற்கு மறுத்துவிட்டது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.< இறுதியில் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றபோது போலீஸாருக்கும், மக்களுக்கும் மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - தீர்ப்பை வாசித்து காட்டிய கிரண்பேடி

மாலைமலர் :யூனியன் பிரதேசங்களில்  அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி: நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

ஸ்டாலின் டிரைவர் பாலு நீக்கம்... உளவு பிரிவுக்கு ஊழியம் ?

சில காலங்களாக ஸ்டாலின் பற்றிய எல்லா தகவல்களும் உளவு துறைக்கு உடனக்கு உடன் தெரிந்து கொண்டே இருந்தது ..  ஸ்டாலின் தரப்பின் பதில் புலனாய்வுக்கு பின் அவர்கள் டிரைவர் பாலுதான் அந்த உளவாளி என்பதை கண்டு பிடித்துள்ளனர், இவர் சுமார் இருபது வருடங்களாக ஸ்டாலினிடம் பணியாற்றி உள்ளார்
Palai Karthik திருச்சி குரு ஹோட்டல் உரிமையாளர் ரங்காவிடம் டிரைவராக இருந்த பாலு, பரணிக்குமார் மூலம் மு.க.ஸ்டாலினிடம் டிரைவராக சேர்ந்தார்.. கடந்த 20 ஆண்டுகளாகமாக, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு எதிராக செயல்பட்டார்..
கடந்த சில மாதங்களாக ஸ்டாலின் வீட்டில் நடப்பவைகளையெல்லாம், உளவுப்பிரிவு போலீசாருக்கு பாலு சொல்லிக்கொண்டு இருந்தார். மு.க.ஸ்டாலின் தன்னுடைய நடவடிக்கைகள் எப்படி உளவுப்பிரிவுக்கு தெரிகிறது என்று நீண்ட விசாரணைக்கு பின் டிரைவர் பாலு மூலம் செல்கிறது என்று உறுதி செய்து, 48 நேரத்திற்கு முன்பு பாலு டிரைவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்...* - வெளிச்சம் டிவி தலைமை செய்தியாளர் வி.எம்.சுப்பையா அவர்களின் பதிவு

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் எடுக்க குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு

BBC : மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மோதி அரசின் புல்லட் ரயில்
திட்டத்துக்கு குஜராத்திலும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் விவசாயிகள். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கான இழப்பீடு குறித்த செயல்முறை மீது விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புல்லட் ரயில் என்பது பல மாநிலத் திட்டம் எனக்கூறி, இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த குஜராத் அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து விவசாயிகள் நீதிமன்றத்தில் தங்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஆனால், மக்களின் ஒப்புதலோடு அவர்களின் நிலத்தை கையகப்படுத்த முடியும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் நம்புகிறது. பத்து நாட்களுக்கு முன்னதாக கீடா மாவட்டத்தின் நைன்பூரில் இருந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் துவக்கினர். குஜராத்திலுள்ள 192 கிராமங்களைச் சேர்ந்த 2500 விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். >நைன்பூரைச் சேர்ந்த விவசாயி கான்பா சவுஹானுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அவருடைய நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. '' இந்த நிலம்தான் பதினைந்து பேர் கொண்ட எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம். இந்நிலத்தினை விட்டுக்கொடுக்க முடியாது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படைதினத்தந்தி :கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ராமேஷ்வரம்< கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஷ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை விரட்டியடித்தது.& இலங்கை கடற்படை விரட்டியதால், மீன் பிடிக்க முடியாமல் ராமேஷ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

2019 தேர்தலுக்கான பிஜேபியின் புதிய உத்தி.

சவுக்கு : அடுத்த பொதுத் தேர்தலுக்கு நாம் நெருங்கிச் செல்கையில்,    நம்பகத்தன்மை குறைந்து வரும் பாஜக  2019 ஆம் ஆண்டின் சவாலை சமாளிப்பதற்காக  அதன் உத்தியை  மறுசீரமைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.  2014 தேர்தலுக்கு, அது ஒரு ஜனரஞ்சகமான அரசியல் உத்தியாக,  காங்கிரஸ் பாணியிலான இணக்கமான அரசியலைப் பயன்படுத்தியது. அதாவது, முக்கியமாக மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு நாம், நமக்கு எதிராக அவர்கள் என்ற உத்தியை  கையாண்டது. இது காங்கிரஸ் சந்தித்த நம்பகத்தன்மை  சரிவோடு சேர்ந்து வெற்றி பெற உதவியது.   நரேந்திர மோடியின் இமேஜ் அக்கட்சிக்கு சாதகமாக இருந்தது. அந்த நேரத்தில், வியத்தகு முடிவுகளை வழங்கக்கூடிய ஒரு தீர்க்கமான தலைவராக அவர் கருதப்பட்டார்.

மறக்க முடியுமா தூத்துக்குடியை ? – அரங்கக் கூட்டம் ,, 06.07.2018 நேரம்: மாலை 5.30 மணி முதல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை ? “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. வினவு செய்திப் பிரிவுt;
நாள்: 06.07.2018 நேரம்: மாலை 5.30 மணி முதல்
இடம்: 6, கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர்.
தலைமை: பீர் முகமது
அறிமுகவுரை: அருள் எழிலன்
சிறப்புரை:
கனிமொழி, MP – திமுக
தொல். திருமாவளவன் – விசிக
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமை கட்சி
தெகலான் பாகவி – எஸ்.டி.பி.ஐ
பாலன் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி
வழக்கறிஞர் அருள்மொழி – திராவிடர் கழகம்
கு. பாரதி – தென்னிந்திய மீனவர் நல சங்கம்
பிரகாஷ்ராஜ் – நடிகர்
த. வெள்ளையன் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
பேராசிரியர் அ.மார்க்ஸ் – மனித உரிமை செயற்பாட்டாளர்
வெற்றிமாறன் – திரைப்பட இயக்குனர்
நன்றியுரை: கவிதா கஜேந்திரன்
நிகழ்ச்சி ஏற்பாடு: தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு
தொடர்புக்கு: 93846 32023

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது , வீடு, அலுவலகத்தில் போலீஸ்,, வழக்கறிஞர்களை குறிவைக்கிறது போலீஸ்..

tamithehindu :தூத்துக்குடி சம்பவத்தையொட்டி கைது செய்யப்பட்ட மதுரை
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு, அலுவலகத்தில் தூத்துக்குடி போலீஸார் 1 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். புகைப்படம் உட்பட ஆவணங்களை கைப்பற்றினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ல் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இக்கலவரத்தை சில அமைப்புகள் தூண்டிவிட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் உட்பட சில அமைப்பினர் மீது போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். கலவரக்காரர்களை தூண்டியதாக மதுரை கேகே. நகரை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதே சம்பவத்திற்கென அவர் மீது 40க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவாகின.

தமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை,,,

ஐ.டி ஊழியர்கள்விகடன்  : இரா.செந்தில் குமார் - பெ.மதலை ஆரோன்t;
இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி ஊழியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர்.
நேற்று சென்னைத் துரைப்பாக்கத்திலிருக்கும் தனது அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் பிரியங்கா. இதற்குக் காரணம் அவரின் சொந்தப் பிரச்னையா… அல்லது உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியா என்கிறரீதியில் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். பிரியங்கா மட்டுமல்ல, கடந்த மாதம் பெங்களூரைச் சேர்ந்த பவேஷ் ஜெய்ஷ்வால், வொய்ட்ஃபீல்டிலிருக்கும் அலுவலகத்தின் 12-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அப்படியே பின்னோக்கிச் சென்றால், மாதம் ஒருவர் அல்லது இருவர் ஐ.டி துறையில் தற்கொலை செய்துகொண்டு இறப்பது தொடர்ந்து நடப்பது தெரியவரும். அவற்றில், `விஷமருந்தி தற்கொலை’, `ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை’… எனக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலும் உண்டு. கடந்த ஆண்டு புனேவில் ஐ.டி ஊழியர் துர்கா பிரசாத், குறிப்பொன்றை எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஈழ அகதிகள் ஊர் ஊராக... புலம்பெயர் தமிழர் ஈழத்தில் கோவில்கள் கட்டுவதில் முனைப்பு

புலம்பெயர் நாடுகளில் ஏராளமான ஒய்வு பெற்ற முதியோர்கள் உள்ளனர்.அவர்களில் பலர் பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாவர். மருத்துவம் , பொறியியல் . கணக்கியல் , கல்வியியல் , விஞ்ஞானம் , வர்த்தகம் போன்ற போன்ற துறைகளில் மிகவும் ஆழமான அனுபவமும் புலமையும் பெற்றவர்கள். இவர்களில் பலரும் நல்ல வசதியான நிலையில் உள்ளவர்கள். இந்த பெரியவர்கள் தாயகத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கும் ஊர்களுக்கும் தங்கள் அறிவை அனுபவத்தை ஆற்றலை பொருளை பயன்படுத்தலாம். . இப்படியான ஆக்கபூர்வமான வழியில் செயல்படாவிட்டாலும் குற்றம் இல்லை. ஆனால் பலரின் செயல்பாடுகள் மிகவும் பிற்போக்கு தனமாக உள்ளது . 
பெரும்பான்மையோர் இந்து சமய பிரசாரகர்களாக மாறி மக்களை மேலும் மேலும் மத வெறி மாய வலையில் தள்ளுகின்றனர். இப்பெரியவர்கள் வாழும் மேற்கு நாடுகள் மதசாரபர்ர் சுதந்திர நாடுகள் . அந்த நாடுகளின் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டு தங்கள் தாய்நாட்டுக்கு மதவெறி குப்பையை கொட்டுவது என்ன நியாயம்? என்ன நேர்மை? இவர்கள் தப்பி தவறி கூட தங்கள் தாய்நாட்டு மக்கள் விஞ்ஞான அறிவோ கல்வி வளர்ச்சியோ பொருளாதார வளர்ச்சியோ பெற்று விடகூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது போல் தோன்றுகிறது . எல்லோரும் எல்லாமும் பெற்றுவிட்டால் தங்களின் சமுக அந்தஸ்து என்பது தனித்துவம் அற்று போய்விடுமே என்ற சுயநலம் இருப்பதாக கருத இடமுண்டு.
ஏனெனில் அடிப்படையில் இவரகள் தாய்நாட்டை பற்றி பேசும் பொழுது அங்குள்ள அரசியல் போராட்டம் கோவில் குளம் போன்றவற்றை பற்றியே அதிக நேரம் செலவு செய்து விளாசி தள்ளுவார்கள் .

புதன், 4 ஜூலை, 2018

மானசரோவரிலிருந்து முன்னாள் காங். எம்.எல்.ஏ. காயத்ரி தேவி.. நிலைமை மிகவும் மோசம்...

உணவின்றி... கோரிக்கை காத்மாண்டு: கனமழை மற்றும் கடுங்குளிரால் மானசரோவரில் மிகவும் மோசமாக தவித்து வருகிறோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி தெரிவித்தார்.
கைலாஷ் மற்றும் மானசரோவர் யாத்திரைக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றனர். வரும் வழியில் நேபாளத்தில் இவர்கள் சென்றுவிட்டு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுள் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட பல்வேறு தமிழர்கள் தவித்து வருகின்றனர். வந்துவிட்டால்… இதுகுறித்து காயத்ரிதேவி கூறுகையில் நாங்கள் மருத்துவ உதவி, தங்கும் இடமில்லாமல் தவித்து வருகிறோம். இந்நிலையில் மானசரோவர் மலையிலிருந்து மேலும் 400 பேர் நாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு வரவிருக்கிறார்கள்.

முதல்வர் நாராயணசாமி: நான் கூறியதைதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது

Pondicherry CM says that SCs judgement is same as what i say tamil.oneindia.com/authors/lakshmi-priya.: புதுவை: யாருக்கு அதிகாரம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் பல முறை கூறியதுதான் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை நாராயணசாமி வரவேற்றார். இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில் அந்த தீர்ப்பை நான் முழுவதுமாக படிக்கவில்லை. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை கூறுகிறேன். இந்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு 100-க்கு 110 சதவீதம் பொருந்தும். நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் இந்த 2 ஆண்டு காலம் வரை, துணை நிலை ஆளுநர் அமைச்சர்களின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அது மட்டுமல்லாது. 19 முறை அவருக்கு கடிதங்கள் எழுதினேன்.

11 பேர் மர்ம மரணத்தில் 12வது நபருக்கு தொடர்பா? புளுவேல் பாணியில் குருஜிக்கள் பாபாக்கள் மகராஜிகள்..

பூட்டப்படாத கதவு, டைரிக்குறிப்பு - 11 பேர் மர்ம மரணத்தில் 12வது நபருக்கு தொடர்பா?மாலைமலர் : டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணத்தில், வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டாமலேயே இருந்துள்ளதாகவும், 25-க்கும் மேற்பட்ட டைரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். #BurariDeath புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 10 பேர் கண்கள் மற்றும் வாயை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பல விசித்திர வழக்குகளை கையாண்ட போலீசார்களே, இந்த கூட்டு தற்கொலையில் ஈடுபட்டவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. முக்திப்பேறு பெறுவதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

சேது சமுத்திர திட்டத்தை முடக்கிய தேசத்துரோகிகள் ... சு.சாமி,ஜெயா. பாஜக, அதிமுக, தமிழ் தேசியர்கள் ,,,,,,

Don Vetrio Selvini : மு க : உடன்பிறப்பே,   இந்திய உச்சநீதி
மன்றம் 2007ஆம் ஆண்டு
செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது.
அதன்படி 20.7.2008 அன்று டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில் வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது.
வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து, இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள அறிக்கையின் மீது தனது கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.
அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன் தாக்கல் செய்தார்.