புதன், 29 ஆகஸ்ட், 2018

பணமதிப்பிழப்பால் கிடைத்த பலன் இதுதானா? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிக்கை

உயிர்களை பலி கொடுத்த மக்கள்
tamil.oneindia.com- veerakumaran.:மும்பை: பண
மதிப்பிழப்பிற்கு பிறகு, திரும்பி வந்த பணத்தை, இப்போதுதான் ஒருவழியாக ரிசர்வ் வங்கி எண்ணி முடித்துள்ளது. இதன் முடிவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி, இரவு திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.
இதையடுத்து மக்கள் தங்களிடமிருந்த நோட்டுக்களை வங்கிகளில் திருப்பியளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகள் வாயிலாக வினியோகிக்கப்பட்டன. ஏடிஎம்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து நோட்டுக்களை பெற்றனர். பல ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை.



உயிர்களை பலி கொடுத்த மக்கள்

பல மாதகாலம் இந்த பாதிப்பு நீண்டது. இதனால் அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பான நடவடிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரை பறி கொடுத்தனர். இதன்பிறகு செல்போன் ஆப்கள், பண அட்டை இயந்திரங்கள் அதிக அளவில் சமூகத்தில் புழக்கத்திற்கு வர வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் இப்படி கார்டுகள் மூலமான பரிவர்த்தனைக்கு வரி என்ற ஒன்றை விதித்து, அதிலும் மக்களுக்கு இழப்பையே கொடுத்தது அரசு.


கருப்பு பணத்தை மீட்பதாக பிரச்சாரம்

கருப்பு பணத்தை மீட்பதாக பிரச்சாரம்

இருப்பினும், கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்பட்டது. எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்பட்டு பணியாற்றும்போது, நாமும் இதுபோல பணத்திற்காக கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றெல்லாம், பாஜக ஆதரவாளர்கள் பரப்புரை செய்துவந்தனர். ஆனால், இத்தனை உயிர்பலி, கஷ்டங்களுக்கும் பலன் கிடைத்ததா என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமலேயே இருந்தது. ஏனெனில், வங்கிகளுக்கு திரும்பி வந்த பணம் எவ்வளவு என்ற சரியான கணக்கை ரிசர்வ் வங்கி இதுவரை அளிக்காமல் இருந்தது.


ரிசர்வ் வங்கி பதில்

ரிசர்வ் வங்கி பதில்

வங்கிகளுக்கு எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்ற விவரம் இருந்தால்தான், திரும்பி வராத பணம் கருப்பு பணம் என்ற முடிவுக்கு வர முடியும் என்பதால் ரிசர்வ் வங்கியை நோக்கி பொருளாதார வல்லுநர்கள் பார்வை இருந்தது. ஆனால், ரூபாய் நோட்டுக்கள் எண்ணும் பணி முடியவில்லை என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. ஒருவழியாக இன்று வருடாந்திர அறிக்கையில், இதுபற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


வராத பணம் குறைவு

வராத பணம் குறைவு

அந்த அறிக்கையில், 15.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் பணமதிப்பிழப்பிற்கு உள்ளாக்கப்பட்டன என்றும், அதில், ரூ.15.31 லட்சம் கோடி திரும்பியுள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 99.3% ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கே திரும்பிவிட்டன. அப்படியானால் ரூ.13,000 கோடி மட்டுமே திரும்பி வரவில்லை. அதிலும் கூட, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளில் உள்ள பணமதிப்பிழப்புக்கு உள்ளான பணம் இன்னும் வரவில்லை. அதை எண்ண வேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், பண மதிப்பிழப்பால் இந்தியா பறிகொடுத்த பொருளாதார பலன் மதிப்பு இதைவிட மிக அதிகம். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், 2017 ஜூன் 30ம் தேதி வரையிலான நிலவரப்படி, 15.28 லட்சம் கோடி திரும்பி வந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது சுமார் 99 சதவீத பணம் திரும்ப வந்துள்ளதாக அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: