மீண்டும் சிறிது நேரத்தில் சைலஜா ரத்தக்காயத்துடன் வெளியே வந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்ன நடந்தது என அறியாமல் குழம்பினர். இதையடுத்து உடனடியாக புதுப்பெண் சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சைலஜா கூறியதாக உறவினர்கள் தெரிவித்ததாவது: அறைக்குள் சென்றபோது திடீரென ராஜேஷ், சைலாஜாவின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். பின்னர் பிளேடால் சரமாரி வெட்டியுள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றனர். இதுகுறித்து சைலஜாவின் பெற்றோர் ஜி.டி.நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ராஜேஷை ஒப்படைத்தனர். ரூ.60 லட்சம் வரை செலவு செய்து திருமணம் நடந்த நிலையில் தனது மகள் வாழ்க்கையை சீரழித்த ராஜேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ெதாடர்ந்து போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக