ஞாயிறு, 3 டிசம்பர், 2017

கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததால் அபராதம்!

கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாததால் அபராதம்!மின்னம்பலம்:  திருச்சியில் கார் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் தலைக்கவசம் ஏன் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்துள்ளனர் அங்குள்ள காவல்துறையினர்.
திருச்சி மாவட்டத்தில் காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்றுள்ளார். அவர் இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடிய அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதன்படி காவல்துறையினர் அனைவரும் திருச்சி மாநகரம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியை அடுத்துள்ள கல்லணை அருகே வேங்கூா் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஜெயராஜ் என்பவர் காரில் வந்துகொண்டிருந்தார். அவரின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்த்தனர். அவர் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக காண்பித்தார். மேலும், அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் தலைக்கவசம் ஏன் அணியவில்லை என்று கூறி பொய்யான வகையில் அபராதம் வசூலித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: