Sankar Ganesh :
ஆசிரியர் கி வீரமணி அவரகள் பற்றி சொல்ல எவ்வளோ இருக்கிறது. மிகச்சிறந்த அறிவாளி. 🙂
பகுத்தறிவாளி!
சட்ட வல்லுநர், கல்வியாளர், ஆங்கில மொழியாற்றல், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், சமூக போராளி, பெண்ணியவாதி, என பல்வேறு பரிமாணங்களை உடையவர் என்றாலும்...
யாருக்கும் எப்போதும் வளைந்து கொடுக்காத ஆசிரியர் அவர்.
தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க 31(c) தனிச்சட்டத்தை உருவாக்கியவர் ஆசிரியர். அன்றைய போராட்டத்தில் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை வழிநடத்தியவர். தோட்டத்திற்குள் அமைச்சர்கள் வந்தாலே சந்திக்க விரும்பாத ஜெ, வீரமணி அவர்கள் தன்னை எப்போது சந்திக்க விரும்பினாலும் அப்பாயின்மென்ட் அளிப்பார். ஜெ மரணிக்கும் வரையில் ஆசிரியர் மீது தனி மரியாதை கொண்டிருந்தார். ஆனால், இதற்காக எல்லாம் ஆசிரியர், ஜெ அவர்களை விமர்சிக்காமல், கண்டிக்கமால் இருந்ததே கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெ அவர்களின் மக்கள் விரோத, சட்ட விரோத நடவடிக்கைளை கடுமையான முறையில் விமர்சித்தவர் ஆசிரியர். கலைஞருக்கும் ஆசிரியருக்கும் இடையே தொப்புள்கொடி உறவு உண்டு என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனாலும், திமுக கொள்கையை கொள்ளாமல் ஓட்டரசியலுக்காக பிறழும் போதெல்லாம் முதல் வசை ஆசிரியர் இடத்திலிருந்து தான் வரும்.
திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்த போது, "கலைஞர், பார்ப்பனியத்திற்கு ஆளாகிவிட்டார்!" என மாபெரும் தவறை சுட்டி திமுகவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். அதேபோல், 2001 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்த போது, அதை கடுமையாக கண்டித்து திமுகவை எதிர்த்தவர்.
சிறுபான்மை மற்றும் பட்டியல் சமூக மக்களின் நலனுக்கு முன்னுரிமையை எப்போதும் தருபவர் ஆசிரியர். அதனால் தான் ஆண்டைகளும், காவிகளும் ஆசிரியரை திட்டுவதில் அலாதி இன்பமடைவர். நீரை அழுத்த முடியாதது போல், ஆசிரியர் எனும் ஜீவநதி சிறுபான்மை மற்றும் பட்டியல் சமூக மக்களிடத்தில் பாய்வதை எவனாலும் தடுக்க முடியாது. ஆசிரியர், தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. ஆசிரியருக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக