ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

நளினி சிதம்பரம் : நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்றால் கடவுளிடம் போங்கள்! விவாகரத்து செய்வாரா சிதம்பரம்?

Troll Trousers 2.0 : நளினி சிதம்பரம்.... நீட் தேர்வு கட்டாயம் வேணும்னு நீதிமன்றத்துல வாதாடி அனிதாவுக்கு மட்டும் தனி சட்டம் கிடையாது இனிமேலும் மேல்முறையீடு செய்யனும்னா கடவுள்கிட்டதான் போகனும்னு சொன்ன உத்தமி... கேட்டா நான் வக்கீல் என்னோட தொழிலைத்தான் செஞ்சேன் அப்டின்னு சொல்லுவா.... நாளைக்கு உன்னோட மகன தூக்கி உள்ள வைப்பானுங்க... முதல் வெடி நான்தான் வெடிப்பேன்! புருசன் நீட்டை எதிர்ப்பான் பொண்டாட்டி ஆதரிப்பாள்... நல்ல குடும்பம்.... நீட்டுக்கு எதிரா இவ்ளோ கலவரம் ஆர்ப்பாட்டம் நடக்குது ஆனா எந்த காங்கிரஸ் காரனாவது வாய திறக்குறானா??? உங்களாளதான்டா பிஜேபி அதிகாரத்துக்கு வந்தது நீங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கி ஏன் நாடு நாசமா போய்கிட்டு இருக்கபோகுது!!!
 
 Rajasekar Pandian : ஒரு விஷயத்தில் மையப்பிரச்சினையை கவனமாக தவிர்த்துவிட்டு பிரச்சினையை லாவகமாக வேறொன்றின் மீது திசைதிருப்புவது அப்பட்டமான தந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான ஆட்கள் அதை அப்படியே நம்புகிறார்கள்.   நளினி  ஒய்வு பெற்ற நீதிபதி கைலாசம் கவிஞர் சௌந்தரா கைலாசம் தம்பதிகளின் மகள். அசல் பார்ப்பன திமிர் குடும்பம். சிதம்பரம்  செட்டியார் ... கொஞ்சம் நேர்மையான குடும்பத்தை சேர்ந்தவர்,  சேர கூடாத இடத்தில சேர்ந்தவர். இந்த நளினி முன்பு ஹர்ஷத் மேத்தாவின் மோசடி ஸ்டாக் வாங்கி ஒரு வழியாக சிதம்பரத்தின் திறமையால் தப்பி பிழைத்த ஊழல் பேர்வழி ..  இவரின் வாரிசு கார்த்திக் கொஞ்சம் கூட சிதம்பரத்தின் கல்வி வாசனையே இல்லாதவர். பக்கா ஊழல் மகன்தான் கார்த்திக் சிதம்பரம் . சிதம்பரத்துக்கு அனுதாபங்கள் !

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பு மீது நைச்சியமாக
மக்களின் கோபம் திருப்பப்பட்டது . அதாவது மத்திய மாநில அரசுகளின் கையாலாகத்தனத்தை மறைப்பதற்காக இந்திய அரசாங்கத்தையே, சர்வ வல்லமை கொண்ட மோடியையே கட்டுப்படுத்துகிற அமைப்பாக பீட்டா உருவகப்படுத்தப்பட்டு பீட்டா தான் காரணம் என பரப்பப்பட்டது.

அதேபோல ஒரு திசை திருப்பல் தான் நீட் விஷயத்தில் நளினி சிதம்பரம் வாதாடிய விவகாரம்.

நிற்க, நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடியதில் உனக்கு உடன்பாடா என்றால் நிச்சயமாக இல்லை . இப்படிப்பட்ட சம்பாத்தியம் சம்பாதித்து தான் வயிறு வளர்க்கவேண்டிய அவசியம் சிதம்பரம் குடும்பத்திற்கு இல்லை . கார்த்தி சிதம்பரம் மீதான சிபிஐ வழக்கை காரணமாக காட்டி நளினி யை இந்த வழக்கில் வாதாட வைத்தார்கள் என்று சொல்வது உண்மையா பொய்யா என எனக்குத் தெரியாது. ஆனால் பிரச்சினை நளினி அல்ல .

ஏதோ நளினி வாதாடியதால் தான் தீர்ப்பே நீட்டுக்கு ஆதரவாக வந்தது போல சொல்லப்படுகிறது. நளினி என்ன வாணி பூமிநாதன் போல ஜட்ஜுக்கே தெரியாத லா பாயின்ட்டுகளை அடுக்கி எந்த கேஸ் எடுத்தாலும் ஜெயிக்கிற இந்தியாவின் ஒரே வழக்கறிஞரா?

தமிழ்நாட்டில் எழுகிற எதிர்ப்பைக் கண்டு இந்த ஓராண்டுக்கு மட்டும் நீட் விலக்கு தரப்படும் என்று மத்திய அரசு முதலில் தெரிவித்தது. Nirmala Seetharaman favours to TN என தி இந்து உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. என்னடா இது துறைக்கு சம்பந்தமே இல்லாத நிர்மலா சீதாராமன் இந்த வாக்குறுதியை அளிக்கிறாரே.. ஒருவேளை தமிழ்நாட்டில் பாஜக முகமாக நிர்மலா முன்னிறுத்தப்பட உள்ளாரா என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு, "இல்லை நாங்கள் இந்த ஆண்டே நீட் மூலம் தான் எம்பிபிஎஸ் சேர்க்கை நடத்துவோம் " என அந்தர் பல்டி அடித்தது . எனவே தான் வழக்கில் நளினி சிதம்பரம் வெற்றி பெற்றார்.

நளினி இல்லாவிடில் நீட் டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்காது என்று சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். நளினி வாதாடவில்லை என்றால் ராம்ஜெத் மலானி யோ ஏன் அருண் ஜேட்லி யோ கூட வாதாடியிருப்பார்கள். இந்தியாவில் சீனியர் லாயர்களா இல்லை? நிர்பயா வன்புணர்வு வழக்கிலே கூட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் உண்டு. எனவே ஏதோ நளினி யால் நீட் ஆதரவு தீர்ப்பு வந்தது என சொல்வது திசை திருப்புகிற வேலை.

இதுல வேடிக்கை என்னவென்றால், சரி நீட் டை எதிர்க்கிறவர்கள் தான் அனிதா மரணமடைந்த கோபத்தில் நளினி மீது கோபத்தை காட்டுகிறார்கள் என்பதை கூட புரிந்துகொள்ளமுடிகிறது. நீட் தேவை என்று அதை ஆதரிக்கிற சங்கிகள் கூட்டம் கூட நளினி சிதம்பரத்தை நைசாக இதில் கோர்த்துவிடுகிறார்கள். ஏன் டா நீ நீட் ட ஆதரிக்கிற, அப்படின்னா நளினி உனக்கு ஆதரவா வாதாடிய வர் தானே? அப்ப நீ அவங்கள பாராட்டத்தானே செய்யனும்? நீ ஏன் அந்தம்மாவ கோர்த்து விடுற? அப்ப நீ நீட் வேணும் னும் சொல்லுவ, நீட் மீதான தமிழக மக்களின் கோபம் மத்திய மாநில அரசுகளின் மீது இருந்து திசை திருப்புவதற்காக மத்தவங்கள கோர்த்தும் விடுவ. இதுக்கு பேர் தான் கூட்டியும் கொடுக்கிறோம் காட்டியும் கொடுக்கிறோம் மொமன்ட்..!

கருத்துகள் இல்லை: