mayura-akilan. Oneindia Tamil
சென்னை:
மேடையில் கருணாநிதி இருப்பதாக மானசீகமாக கருதி பேசுகிறேன் என்று கூறி
முரசொலி பவளவிழாவில் பேசினார் வைகோ. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக
மேடையில் உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.
மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா செப்டம்பர் 5ஆம்தேதியான இன்று கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது.
முரசொலி
பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார் வைகோ. முன்னதாக
ஸ்டாலினுக்கு வைகோ பொன்னாடை போர்த்தியபோது திமுக தொண்டர்கள் பேரெழுச்சி
முழக்கமிட்டனர்.
11 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மேடையில் வைகோ உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.
மேடையில் கருணாநிதி இருப்பதாக மானசீகமாக கருதி பேசுகிறேன் என்று கூறிய வைகோ, கருணாநிதியின் என் உயிரினும் மேலான உடன்பிறப்பே என்ற குரல் மீண்டும் ஒலிக்கும் என்று கூறினார்.
வரலாற்று சிறப்பு மிக்க நாளில் முரசொலி பவளவிழா நடைபெறுகிறது. அண்ணாவின் எல்லையற்ற அன்பை பெற்றவர் கருணாநிதி.
சேரன் என்ற புனை பெயரில் பேனாமுனையை வாள்முனையாக்கினார் கருணாநிதி. சேரன் செங்குட்டுவன் தீட்டும் சிலப்பதிகாரம் என முரசொலியில் அண்ணா எழுதினார்.
1974-ல் என்னுடைய உடல்நிலை நலிந்த போது மிகவும் வருந்தியவர் கருணாநிதி. என்னை மீண்டும் சிகிச்சை பெறச் சொன்னார். வேலூரில் சிகிச்சை பெற கருணாநிதியே உத்தரவிட்டதாக கூறினார்.
பழைய நினைவுகளை மேடையில் அசைபோட்டார் வைகோ. நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியும் பேசினார் வைகோ.
தம்பி வா.. தலைமையேற்க வா கருணாநிதியை அழைத்தார் அண்ணா. அந்த அழைப்பும் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கிறது என்று கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக