சினிமா பிரபலங்களை அனுமதிக்காத மாணவர் போராட்டம்!>நீட்
தேர்வை ரத்து செய்யக்கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும்
தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்கள் தன்னிச்சையாக
முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு
தெரிவித்தாலும் அவர்களை இணைத்து போராட்டத்தை தொடரப்போவதில்லை என மாணவர்கள்
தீர்க்கமாக முடிவெடுத்துள்ளனர்.
சென்னை, லொயோலா கல்லூரி மாணவர்கள் இன்று (செப்டம்பர் 5) வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு இயக்குநர் வ.கௌதமன், வெற்றிமாறன், நடிகை ரோகினி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய வெற்றிமாறன், “மாணவர்களின் இந்த முடிவை வரவேற்கிறேன். அவர்களுக்கான உரிமையையே மாணவர்கள் கோருகின்றனர், அதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும். சி.எம் ஆவது மட்டுமே அரசியல் கிடையாது. மக்களின் பிரச்சனைகளுக்கு களத்தில் இறங்கி குரல் கொடுப்பதும் அரசியல் செயல்பாடுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தின் போது திரையுலகைச் சேர்ந்த லாரன்ஸ், ஆதி ஆகியோர் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளானது. எனவே தற்போது நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை அனுமதிக்காமல் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிவருகின்றனர். மாணவர்களின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் ஆதரவு அதிகரித்து வருகிறது மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக