ஞாயிறு, 21 மே, 2017

வடகொரியா மட்டுமல்ல தென் கொரியாவும் நரகம்தான்? வெளியேற துடிக்கும் மக்கள்?

தென் கொரியா: ந‌ர‌க‌த்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கும் இளைஞ‌ர்க‌ள் Young South Koreans call their country ‘hell’ and look for ways out. (The Washington Post, January31, 2016) வ‌ட‌ கொரியாவை ப‌ற்றி மிக‌ மோச‌மாக‌ க‌ற்ப‌னை செய்து க‌ட்டுக்க‌தைக‌ளை ப‌ர‌ப்பும் விஷ‌மிக‌ள், தென் கொரியா ப‌ற்றி ஆஹா ஓஹோ என்று புக‌ழ்ந்து பேசுவார்க‌ள். ஆனால் தென் கொரிய‌ ம‌க்க‌ள், குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ள், த‌ம‌து நாட்டை ந‌ர‌க‌ம் என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள். ப‌ண‌க்கார‌ குடும்பங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் ம‌ட்டுமே, உய‌ர் க‌ல்வி க‌ற்று உய‌ர் ப‌த‌வி வ‌கிக்கும் வாய்ப்புக‌ளை பெறுகிறார்க‌ள். அந்த‌ப் பிள்ளைக‌ள் த‌ர‌மான‌ க‌ல்விக்கு செல‌விடும் அள‌விற்கு வ‌ச‌தியாக‌ உள்ள‌ன‌ர். ப‌ண‌ வ‌ச‌தியில்லாத‌ குடும்ப‌ங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் அதையெல்லாம் நினைத்தும் பார்க்க‌ முடியாது. "சொகுசான‌" அலுவ‌ல‌க‌ வேலை செய்யும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் கூட‌ க‌டும் வேலைப் ப‌ளுவினால் அவ‌திப் ப‌டுகின்ற‌ன‌ர். அதிக‌ நேர‌ம் வேலை செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். ச‌ம்ப‌ள‌ம் கூட‌ ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை.
உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ பிரான்ட் பொருட்க‌ளை உற்ப‌த்தி செய்யும் சாம்சுங், ஹையுன்டாய் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணிப் பாதுகாப்பு கிடைப்ப‌தில்லை. விரும்பிய‌ நேர‌ம் வேலையில் இருந்து தூக்கி வீச‌ப் ப‌ட‌லாம். முதுமை அடைந்தால் முன்கூட்டியே ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட‌லாம்.
தென் கொரியாவில் த‌ம‌க்கு எதிர்கால‌ம் இல்லையென்ப‌தை உண‌ர்ந்து கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று புல‌ம்பெய‌ர்ந்து செல்கிறார்க‌ள். அமெரிக்க‌ இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ணியாற்றினால் குறுக்கு வ‌ழியில் அமெரிக்க‌ குடியுரிமை கிடைக்கும், பிற்கால‌த்தில் அமெரிக்காவில் குடியேற‌லாம் என‌ ந‌ம்புகிறார்க‌ள்.
பிற்குறிப்பு: வ‌ட‌ கொரியாவில் மேற்குறிப்பிட்ட‌ பிர‌ச்சினை எதுவும் கிடையாது. ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் வ‌ரையில் க‌ல்வி அனைவ‌ருக்கும் இல‌வ‌ச‌ம். தொழில் வாய்ப்புக‌ள் நிச்ச‌ய‌ம். ப‌ணியில் அம‌ர்ந்தால் அது நிர‌ந்த‌ர‌ம். யாரையும் இல‌குவில் வீட்டுக்கு அனுப்ப‌ முடியாது. ச‌ம்ப‌ள‌ம் மிக‌க் குறைவாக‌ இருந்தாலும் குடியிருக்கும் வீட்டுக்கு வாட‌கை இல்லை. எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌ மிக‌க் குறைவு. /kalaiy.blogspot.com

கருத்துகள் இல்லை: