டெல்லி:
என்டிடிவியில் கடந்த 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மூத்த செய்தியாளர்
பர்காதத் அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் அமெரிக்காவின்
புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் குளோபல் ஒப்பினியன்
பத்திரிக்கையில் பணியாற்றவுள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளரான பர்காதத் என்டிடிவியில் கடந்த 21 ஆண்டுகளாக பணிபிரிந்து வந்தார். வி தி பீப்புள் என்ற நிகழ்ச்சியை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.< இந்நிலையில் அவர் என்டிடிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பர்காதத் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிக்கையான தி வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு பிரிவான குளோபல் ஒப்பினியனில் பணியாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்காதத் ஒரு சிறந்த கட்டுரையாளர், பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சர்வதேச ஒளிபரப்பு சங்கம் 2012ஆம் ஆண்டின் அச்சமற்ற நிரூபர் என்ற பட்டமளித்தது.
பர்காதத் இரண்டுமுறை உலக பொருளாதார மன்றத்தின் நாளைய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் தனது முதுகலை பட்டத்தை கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியில் முடித்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் தனது நிறுவனத்தை விரிவாக்கவுள்ளது இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பத்திரிக்கையாளர்ளை சேர்த்து வருகிறது. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக