அந்த
ஆம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து வெளியே வந்தபோது எல்லோருடைய இதயமும்
கனத்திருந்தது. டிசம்பர் 5-ந் தேதி இரவு 12:30 மணிக்கு ஜெ.வின் மரண
அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகி, நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஜெ.வின்
உடலை மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்கு எடுத்துச் சென்றது ஃப்ளையிங்
ஸ்குவாடு அண்ட் ஹோமேஜ் கம்பெனியின் ஆம்புலன்ஸ். இதே நிறுவனம்தான் ஜெ.
மரணத்துக்கு முன்பே ‘"ஸ்பெஷல்'’ ஐஸ்பெட்டியை (ஃப்ரீசர்) தயாரித்தது என்கிற
தகவல் நமக்கு கிடைத்தது. உண்மையறியக் களமிறங்கினோம்.>ஒருவாரத்திற்கு
முன்பு தனது தகப்பனாரை பறிகொடுத்த நண்பரை அழைத்துக்கொண்டு சென்னை
கீழ்ப்பாக்கம் கார்டன் காலனி, வெளிப் புறச் சாலையிலுள்ள ஃப்ளையிங் ஸ்குவாடு
அண்ட் ஹோமேஜ் கம்பெனிக்கு விரைந்தோம். நம்பகத்தன்மைக்காக கோட்டு சூட்,
ஸ்கார்ப்பியோ வாகனம் உள்ளிட்டவை தேவைப்பட்டன. நிறு வனத்தின் உரிமையாளர்
சாந்தகுமார் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வரவேற்றார்.
;பெரிய பாக்கியம்!நண்பரின் தகப்பனாரின் இறுதிச்சடங்கு என சொல்ல ஆரம்பித்ததுமே, ""ஃப்ரீசர் பாக்ஸ் வேணுமா? எந்த டைப் வேணும்? இதோ வாசலில் இருக்கே அது ஜெய லலிதாம்மாவுக்கு வெச்சது.… அந்த டைப் வேணுமா இல்ல… வேற டைப் வேணுமா?''’என்று ஆவலுடன் கேட்டார் சாந்தகுமார். நாமும் அப்படியே மெயின்டெய்ன் செய்தோம். உண்மைகளைத் தேடும் ஆர்வத்துடன்
"ஃப்ரீசர் பாக்ஸை லோக்கலிலேயே ஏற்பாடு பண்ணிக் கிட்டிருக்கோம். எங்களுக்கு ரிச்சான காஃபின் பாக்ஸ் (சவப்பெட்டி) பண்ணிக்கொடுத்தா போதும்''’என்றோம்.""அப்படின்னா, அம்மாவுக்கு காஃபின் பாக்ஸ் பண்ணினதுல ஒருத்தரை வரவைக்கிறேன். அவர்கிட்டேயே பேசிடுங்க''’என்று உடனடியாக ஃபோனைப் போட்டு கிருஷ்ணமூர்த்தி என்பவரை வரவழைத்தார். அவர் வருவதற் குள்ளான நேரத்தில் ""என்ன சார்,…அம்மாவுக்கு ஐஸ்பாக்ஸ் ஃப்ரீயாவே பண்ணிக் கொடுத்தீங்களா?''’என்றோம்.
"ஜி.கே. மூப்பனார், நடிகர் திலகம் சிவாஜி, நடிகை பத்மினி, டி.ஜி.எஸ்.தினகரன், சிவந்தி ஆதித்தனார், நடிகை மனோரமான்னு பல பிரபலங்களுக்கு நாமதான் சார் பண்ணிக் கொடுத்திருக்கோம். அது மாதிரிதான் அந்தம்மாவுக்கும். ஹெலிகாப்டரில் பறக்கும்போதே அவரைக் கையெ டுத்துக் கும்பிட்டாங்க. அப்படிப்பட்டவங்களோட உடலைத் தொட்டுத் தூக்கினது, அவங்களுக்கு பாக்ஸ் செஞ்சு கொடுத்தது எல்லாமே எனக்கு மிகப்பெரிய பாக்கியம் சார். அதனால தான், கடவுளுக்கு உண்டான மரியாதையை அவங்களுக்கு செஞ்சோம்.… காசு என்ன சார் காசு''’ என்று உணர்ச்சிவசப் பட்டார்.""அம்மாவோட சவப்பெட்டியில பேரு பொறிச்ச மாதிரி கேட்கிறீங்க? அப்படின்னா, அம்மாவுக்கு தயார் பண்ணின கேஸ்கெட் டீக் உட்லேயே ரெடி பண்ணிடலாமா?''’’
;""ஜெயலலிதா அம்மாவுக்கு சந்தனப் பேழைன்னுதானே சொன்னாங்க?''’
""தோ...…வெளியில இருக்குதே ஃப்ரீசர் பாக்ஸ். அதைக்கூடத்தான் தங்கப்பேழைன்னு சொன்னாங்க. அப்படித்தான் இதுவும்'' என்று நமட்டுச் சிரிப்பை உதிர்த்தவர்கள், ""டீக் உட் ஃபினிஷ்டு சார்...… இதுலதான் அம்மாவுக்கு பேரு எழுதின மாதிரி எழுத முடியும். அதுவும், தனியா உட்ல எழுதி கட் பண்ணிக் கொண்டுவந்து இதுல ஒட்டணும். அதுக்கெல்லாம் கொஞ்சம் டைம் எடுக்கும் சார்''’என்றவரிடம், ""நாளைக்கு ஈவ்னிங் 4 மணிக்கு கிடைச்சுடுமா?''’என்றோம்.
;""ஜெயலலிதாம்மாவுக்கு பண்ணினது கொஞ்சம் ஸ்பெஷல்.…அதேமாதிரி பண்ணணும்னா கொஞ்சம் டைம் எடுக்கும். அவங்க சைடில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவு சொல்லி கன்ஃபியூஸ் பண்ணிட்டாங்க சார். கடைசியா, இரண்டரை அடி அகலம், 6 அடி உயரத்திலே செஞ்சு கொடுத்தோம். நீங்க அதே மாதிரித்தான் வேணும்னு சொன்னீங்கன்னா... பெட்டியை புதைக்கிறதுக்கு வழக்கமான இடம் பத்தாது சார். அது வேற இது வேற.
"வின்சென்ட் பார்க்கர் நிறுவனம்தானே ஜெ.வுக்கு சவப்பெட்டி தயாரித்தது'' என்று நாம் கேட்டபோது... ""நாங்க பக்கத்துல பக்கத்துல இருக்கிறவங்கதான். ஆள் பற்றாக்குறை,… உடனே அவசரமா செய்யணும்னதும் எங்க ஆட்களையும் அழைச்சுக்கிட்டாங்க.’இப்பவே ஆர்டர் கொடுத்துட் டீங்கன்னா, நாங்க பெட்டி ரெடிபண்ண ஆரம்பிச்சுடுவோம்'' என்று அவசரப்படுத்தினார். ""தம்பி வந்துக்கிட்டிருக்காரு. அவர் ஓ.கே. பண்ணினதும் ரெடி பண்ண ஆரம்பிச் சுடுங்க...''’என்று சமாளித்து, அங்கிருந்து திரும்பினோம். >புத்தம் புது பெட்டி!
"சவப்பெட்டியை முனைப்பாகச் செய்தால் ஒருநாளில் தயார் செய்துவிடலாம். ஆனால், ஜெ.வுக்காக ஃப்ரீசர் பாக்ஸான ஐஸ்பெட்டியை புத்தம் புதிதாக எப்படித் தயாரித்திருக்க முடியும்?' என்ற சந்தேகத்தைத் தெளிவுபடுத்த சாந்தகுமாருக்கு ஃபோன் செய்தோம். ""அம்மாவுக்கு வெச்ச ஐஸ் பெட்டியையே ஆர்டர் கொடுக்கலாம்னு தோணுது. அவங்களுக்கு முன்னால அந்த பாக்ஸ்ல எந்தெந்த வி.ஐ.பி.ல்லாம் வைக்கப்பட்டிருக்காங்க சார்?''’’என்றோம்."ஃப்ரீசர் பாக்ஸ் சீல் பிரிச்சதுமே அம்மாவைத்தான் முதன் முதலில் வைத்தோம்''’என்றவரிடம், ""பொதுவா ஒரு ஃப்ரீசர் பாக்ஸ் செய்ய எத்தனை நாள் சார் ஆகும்?'' என்றோம்.
""ஒரு வாரத்துக்கு மேல ஆகும் சார். இதுக்கு முன்னால பண்ணினதெல்லாம் சிங்கிள் கம்ப்ரசர். ஆனா, இது டபுள் கம்ப்ரசர். இந்த ஃப்ரீசர் பாக்ஸ் மார்ச்சுவரி டைப் கொண்டது. பத்து பன்னிரெண்டு நாட்கள்கூட பாடியை அப்படியே வெச்சிருக்க லாம். மாய்ஷர் க்ரூப் கண்ணாடி. கூலிங்கான ஈரம்கூட படியாது. கோல்டு ப்ளேட்டிங்'' என்றார். இதன்மூலம் ஜெ.வின் மரணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவருக்கான ஃப்ரீசர் பாக்ஸ் ரெடி பண்ணப்பட்டிருக்கிறது என்பது உறுதியானது. அப்படியென்றால் சம்பந்தப்பட்டவர்கள் ஜெ.வின் மரணத்தை முன்கூட்டியே எதிர்பார்த்து எல்லாவற்றையும் ரெடி செய்துள்ளனர்.
அதுபோலவே, சவப்பெட்டியும் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி உயரதிகாரி முன்னின்று பார்வையிட்டிருக்கிறார். "எல்லாமே செட்டப்' என்ற தலைப்பில் 2016, டிச.11-13 இதழில் நாம் எழுதியதும் உறுதியாகிறது. ;எம்பாமிங் சர்ச்சை!;ஜெயலலிதாவின் கன்னத்தில் இருக்கும் ஓட்டைகள் எம்பாமிங் செய்யப்பட்டதற்கான அறிகுறி அல்ல என்று நக்கீரனில் தெளிவுபடுத்தப் பட்டதுடன், எம்பாமிங் எப்படி செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தோம்.";திறந்த நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்ட ஜெ.வின் உடல் நிச்சயமாக எம்பாமிங் செய்யப்பட்டது போலத்தான் இருக்கிறது என்று சந்தேகத்தை கிளப்புகிறார்கள் எம்பாமிங் குறித்து அறிந்தவர்கள். ""எம்பாமிங்கிற்கு கை மற்றும் தொடை பகுதிகளில் ஓட்டைகள் போடப்படும் என்று நக்கீரனில் எழுதப்பட்டிருந்தது போல, ஓட்டைகள் போட்டிருக்கலாம். எம்பாமிங் செய்யாமல் அவங்க முகம் இவ்ளோ ஃப்ரெஷ்ஷா இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை.
;வெடிகுண்டால் சிதைக்கப்பட்ட ராஜீவ் காந்தியை பேக்கிங் செய்து அனுப்பியது பிரபல ஃபென் அண்ட் கோ நிறுவனம்தான். அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டதுதான். அப்துல்கலாமை யும் எம்பாமிங் செய்துதான் கொண்டுவந்தார்கள். டபுள் கம்ப்ரசர் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸ் விரைவாக கூலிங் ஆனாலும், அதை மூடி வைத்தால் தான் கூலிங் நீடிக்கும். உடலைப் பாதுகாக்கும்; ஆனால் ஜெ.வின் உடல் வைக்கப்பட்ட பாக்ஸ் திறந்தே இருந்தது. அப்படியிருந்தும், ஜெ.வின் உடல் ஃப்ரெஷ்ஷாக இருந்ததுதான் எம்பாமிங் கிற்கான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அட்வான் ஸான எம்பாமிங் எல்லாம் வந்துவிட்டது'' என்கிறார்கள்.">மறைக்கும் தமிழக அரசு மருத்துவர்கள் டீம்!
ஜெ.வுக்கு சிகிச்சை அளிப்ப தற்காகவும் அதுகுறித்த விவரங்களை கண்காணித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காகவும், சுகாதாரத்துறையின் மூலம் ஸ்பெஷல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஐந்துபேர் கொண்ட அரசு மருத் துவர்கள் நியமிக்கப்பட்டிருந் தார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கலா (மயக்க வியல் துறை தலைவர்), சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் தர்மராஜ், டாக்டர் டிட்டோ, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையைச் சேர்ந்த டாக்டர் முத்துச்செல்வன், எம்.எம்.சி. நுண்துளை அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் பாலாஜி ஆகியோர்தான் அந்த ஐந்துபேர் கொண்ட டாக்டர்கள் டீம். இதில், டாக்டர் பாலாஜி அப்பல்லோ மருத்துவமனையின் கன்சல்டண்ட்டாக இருப்பவர். இவர்தான், இடைத்தேர்தல் விண்ணப்பத்தில் ஜெ. கைரேகை வைப்பதற்கு சாட்சியமாக இருந்தவர். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவின் குடும்பத்தினருக்கு மகாபலிபுரம் என பல இடங்களைச் சுற்றிக் காண்பித்து சுற்றுலா கெய்டாக செயல்பட்டவர். இதனாலேயே, அவருக்கு தமிழக அரசின் உறுப்புதானத் திட்டத்தின் தலைவராக ஸ்பெஷல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த 5 டாக்டர்கள் டீம் இதுவரை எந்த அறிக்கையும் தரவில்லை.;விடையளிக்காத அப்பல்லோ!"ஜெ.வின் சிகிச்சை குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்பவர் களும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பவர்களும் மருத்துவரீதி யாக சரியான சந்தேகங்களை முன்வைத்தால்தான் எடுபடும்'’ என்கிற டாக்டர் புகழேந்தி, ""முதலில் அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்படுவதற்கு முன் சில நாட்களாக காய்ச்ச லால் அவதியுற்றவர் சுயநினைவு இழந்த நிலையில் தான் அனுமதிக்கப்பட்டாரா? ஆம், எனில் சுய நினைவு இழக்க மருத்துவக் காரணங்கள் என் னென்ன? அவரை மருத்துவமனையில் அனுமதிப் பதில் காலதாமதம் ஏற்பட்டதா?
தீவிரக் கண் காணிப்பில் இருந்தபோது கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான மருத்துவக் காரணங்கள் என்ன? நின்ற இதயத் துடிப்பை சீராக்க எவ்வளவு நேரம் ஆனது? அப்பல்லோவின் அதிகாரபூர்வ அறிக்கையில் பிற காரணங்கள் (அண்டர்லைன் கண்டிஷன்ஸ்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே அந்தக் காரணங்கள் என்ன? மனஅழுத்தத்தை குறைக்க பிரத்தோடியன் -75 மில்லிகிராம் மாத்திரையை தொடர்ந்து ஜெ. உட் கொண்டது உண்மையா? பயோ கிளிட்டசோன் போன்ற சர்க்கரை வியாதி மருந்துகள் கொடுக்கப் பட்டதா? தமிழக அரசு நியமித்த ஐந்துபேர் கொண்ட டாக்டர்கள் டீம் ஏன் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை? என மருத்துவ ரீதியான கேள்விகளை முன்வைத்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்'' என்கிறார் ஆலோசனையாக. இந்நிலையில், ஃப்ரீசர் பாக்ஸ் செய்த ஃப்ளையிங் ஸ்குவாடு அண்ட் ஹோமேஜ் நிறுவனத்தின் உரிமை யாளர் சாந்தகுமாரிடம் மீண்டும் நாம் கேட்டபோது, ""நான் வழக்கமாக மூன்று மாதத்திற்கொருமுறை புதிய வடிவத்தில் ஃப்ரீசர் பாக்ஸ் செய்வேன். அப்படி, தயாரித்ததுதான் இந்த ஃப்ரீசர் பாக்ஸ். அம்மாவுக்கு இது பொருந்திவிட்டது''’ என்றார்
மிகவும் கவனமாகவும் நழுவலாகவும். "சவப்பெட்டி செய்த வின்சென்ட் பார்க்கர் நிறுவனத்தின் உரிமையாளர் சிம்சனிடம் கேட்டபோது, ""சாரி சார்... இது குறித்து மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று இன்ஸ்ட்ரக்ஷன் உள்ளது''’என்று மறுத்துவிட்டார்.
;ஜெ. இறப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஃப்ரீசர் பாக்ஸ் ஆர்டர் கொடுத்தது யார் என்பது தொடங்கி, விடையளிக்கப்படாமல் இருக்கும் பல கேள்விகளுக்கான விடைகளையும் நீதிமன்றமும் சி.பி.ஐ.யும் தோண்டி எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஜெ.வின் விசுவாசிகளிடம் அதிகரித்துள்ளது. நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக