தமிழத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக ரஜினி பேசியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்த வகையான அசாதாரண சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும் என்று சரத்குமார் வலிறுயுத்தியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டு அரசியல் குறித்து கருத்து கூற ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி பேசும்பொழுது இன்றைய அரசியல் சூழ்நிலையில் சோஅவர்கள் இருந்திருந்தால் மிகவும் நல்லது என்றார். மேலும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பும் விடுத்திருந்தார். தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக