ஞாயிறு, 15 ஜனவரி, 2017

CBI தயாராகிறது ?அந்த 75 நாட்கள் ... அப்போலோவுக்கு எந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிப்பட்டார்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட தலைமைப்பீடத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யாக நீடிக்கும் சசிகலாபுஷ்பா. ஜெயலலிதாவின் மரண மர்மம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை என்ற தகவல்தான் அது.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை கடந்த டிசம்பர் 19-ந் தேதி சந்தித்த சசிகலா புஷ்பா, ""மக்கள் செல் வாக்குமிக்க முதல்வரான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணையில் மட்டுமே அந்த மர்மங்கள் விலகும். அதனால் அதன் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்''’என புகார் கடிதம் கொடுத்தார் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா.


;அவரது புகார் கடிதத்தைத் தற்போது சி.பி.ஐ.யின் நிர்வாக அமைப்பான பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இது குறித்து தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ""மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில்தான் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.), மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (சி.வி.சி.), மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) உள்ளிட்ட பல முக்கிய அமைப்புகள் வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் அவரது அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இவை இயங்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுக்கப்படும் புகார்களில் உண்மைத்தன்மை இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப் பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

மற்றவை குப்பைக்கூடைக்குப் போவதும் உண்டு. சசிகலா புஷ்பாவின் மனு, இருபதே நாட்களில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகிறதென்றால், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை மத்திய அரசு நம்புகிறதென்றுதான் அர்த்தம். <சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் நேரடியாக உத்தரவிட முடியாது. சி.பி.ஐ.யின் நிர்வாக அமைப் புக்குத்தான் புகாரை பரிந் துரைக்க முடியும். அதைத்தான் உள்துறை அமைச்சகம் தற்போது செய்திருக்கிறது. புகாரில் கூறப்பட்ட விசயங் களுக்கு அடிப்படை முகாந் திரம் இருப்பதாக பிரதமர் அலுவலகமும் மத்திய அரசும் நினைப்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு இப்பிரச்சினை போகும். தமிழக அரசில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகம் இருப்பதால் சம்பந்தப்பட்ட வர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்து புஷ்பாவின் கடிதம் புயலை வீசுமா? புஸ்வாண மாகுமா? என்பது தெரியும்'' என்கிறார்கள் மிக சீரியசாக.

புகார் மனு அளித்த சசிகலா புஷ்பாவிடம் நாம் பேசியபோது, ""சசிகலா கும்பலின் சதியால் தான் ஜெயலலிதா மரணமடைந் திருக்கிறார். செப்டம்பர் 22-ந் தேதி எந்த சூழலில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்பதில் தொடங்கி அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள், செலுத்தப்பட்ட மருந்துகள், இதய துடிப்பு நின்றதாகச் சொல்லப் பட்டது வரையிலும் மர்மங்கள்தான். வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோதும், அதனை நிராகரித்திருக்கிறார்கள்.

இறப்புக்கு முந்தைய ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்பதற்கும் தெளிவான பதில்கள் இல்லை. 75 நாட்களில் நடந்த சதியை வெளிக்கொணரத்தான் சி.பி.ஐ. என்கொயரி கேட்டிருக்கேன். அவர்கள் என்னை அழைத்து விசாரிக்கும்போது பல உண்மைகளைச் சொல்வேன்.  சி.பி.ஐ. விசாரணையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நான் ஓயமாட்டேன்''’என்கிறார் ஆவேசமாக.

;சசிகலா புஷ்பாவின் கடிதம் மேல்நடவடிக்கைக்காக கடந்த 8-ந் தேதி மதியம் 2 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3 மணிக்கெல்லாம் இந்தச் செய்தி பரவத் தொடங்கிவிட்டது. அன்று மாலை 4 மணிக்கு நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக அ.தி.மு.க. தலைமையகம் வந்த சசிகலாவிடம் இந்த விசயத்தை டாக்டர் வெங்கடேஷ் சொல்ல, சசியின் முகம் இருளடைந்தது. அங்கிருந்த கட்சியினரிடம், பெயருக்கு சில வார்த்தைகள் சுரத்தின்றிப் பேசிவிட்டு, ஐந்தே நிமிடத்தில் போயஸ் கார்டன் திரும்பிவிட்டார் சசிகலா.

"சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் எழுப்பிய சந்தேகக்  கேள்விகள், புஷ்பாவின் கடிதம் சி.பி.ஐ.க்கு அனுப்பப்பட்டிருப்பதாக வந்த தகவல் இதெல்லாம் சசிகலாவை அப்செட்டாக்கியுள்ளது.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு மட்டும்தான் சசிகலா தரப்புக்கு  பாசிட்டிவ்வாக சில விசயங்களை செய்து கொடுக்கிறார். ஆனால்,  ராஜ்நாத்சிங் போன்ற பல முக்கிய அமைச்சர்கள் சசிகலாவுக்கு எதிராகவே இருக்கிறார்கள். நெருக்கடி வளையம் இறுக்குகிறது''’என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

;இதற்கிடையே, அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் நாம் பேசியபோது, "அப்பல்லோவில் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தையும் பிரதமர் மோடி அறிவார். இதய துடிப்பு திடீரென நின்றதுதான் மரணத்திற்கான காரணம்ங்கிறது மோடிக்குத் தெரியும். அதனால் சி.பி.ஐ. விசாரணையெல்லாம் வராது'‘என்று நம்புகின்றனர்.

;-இரா.இளையசெல்வன்d;">படம் : எஸ்.பி.சுந்தர் நக்கீரன்

கருத்துகள் இல்லை: