தமிழகத்தின் புதிய கவர்னராக பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி நியமிக்கப்படலாம் என்ற தகவல் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய நிதித்துறை அமைச்சர் அல்லது சட்டத்துறை அமைச்சர் பதவிகளில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஏற்கனவே அவர் பலமுறை கூறி இருக்கிறார். அப்படி இருக்க அவர் கவர்னராக நியமிக்கப்படுவாரா என உறுதியாக கூற முடியாது.
இருப்பினும் ஜெயலலிதா மறைந்த நிலையில், தமிழகத்தை அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டதால், இந்த தகவல் முக்கியத்துவம் பெறுகிறது. கவர்னராக சுப்பிரமணிசாமி நியமிக்கப்பட்டால், தமிழக அரசு மற்றும் அரசியல் நிலைமை எப்படி இருக்கும்? இனி பிஜேபி யின் அரசியல் வித்தைகள் ராஜ் பவனில் அரங்கேறும். எச்.ராஜா, குருமூர்த்தி போன்றவர்களின் ஒரு சாதி சார்பான, நடவடிக்கைகள் பகிரங்கமாக இடம்பெறும் . இவர் ஒரு வெகுஜன விரோதி. இவரை தவிர்ப்பது, தமிழகத்துக்கு மட்டுமல்ல எந்த மாநிலமாக இருந்தாலும் நல்லதே. பிள்ளை பூச்சியை, ஓணானை வேட்டியில் கட்டிக்கொள்ளும் கதை இவரை கவர்னராக ஏற்பது.. முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக