சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசுவதால் 3000
மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன.
இதனிடையே சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்து இன்று இரவுக்குள் மின்சார சப்ளை
வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில்
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் குறைந்த பி மின்சாரம்
வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போர்க்கால
அடிப்படையில் அவை சீர் செய்யப்பட்டு இன்று இரவுக்குள் மின்சார சப்ளை
மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி தெரிவித்தார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3 ஆயிரம் மின் ஊழியர்கள்
சென்னையில் குவித்து தயாராக வைக்கப்பட்டுள்ளனர். மின்சார கம்பிகள் அறுந்து
கிடந்தால் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக