வியாழன், 24 டிசம்பர், 2015

வெள்ள நிவாரணம் :.வந்தது வெள்ளம் அல்ல....அதிஷ்டம்....சொல்வது வசூல் கோஷ்டி...அடப்பாவிகளா?

"சென்னை நகரில் நிவாரணக் கணக் கெடுப்பில் யார் வேண்டுமென்றாலும் தங்களது பெயரை பதிவு செய்யலாம். வீடு பெறவேண்டு மென்றால் 1 லட்ச ரூபாய், பாதிப்பே இல்லாமல் வெள்ள நிவாரணத் தொகை 5,000 ரூபாய் பெற 2,500 ரூபாய் லஞ்சம் என ரேட்டை ஃபிக்ஸ் செய்து அடாவடி வசூலில் அதிகாரிகளுடன் கூட்டணிப் போட்டு அ.தி.மு.க.வினர் வசூல் வேட்டையில் இறங்கி கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டிருக்கின்றனர்'' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.வெள்ள நிவாரணம் எப்போது வரும் என்ற ஏக்கக்குரல் சென்னையில் பலமாக ஒலிக்கிறது."இன்று வரை எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. வெள்ளத்தை வடிய வைக்கத் தோண்டிய குழிகளில் இன்றுவரை தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. குடிசைக்குள் நுழைய முடியாமல் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறோம்'' என கண்ணீர் மல்கக் கதறும் சுகன்யாவின் சோகத்தைக் கேட்க அங்கே யாருமில்லை. சுகன்யா வசிக்கும் தாம்பரம் வரதராஜபுரம் சுற்றுப்பகுதி முழுவதும் இதே நிலைமைதான் என்பதை டெடல், ராஜா ஆகியோரும் உறுதி செய்கிறார்கள்.

""இந்தப் பகுதியில் வெள்ளநீரை அடையாறுக்கு எடுத்துச் செல்லும் பார்ப்பான் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டினார்கள் என்ற அம்பேத்கர் புதுநகர்  நகரைச் சேர்ந்த 110 வீடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். இதே பார்ப்பான் கால்வாயை முழுமையாக ஆக்கிரமித்து "பேஸ்' என்கிற கட்டுமான நிறுவனம் அபார்ட் மெண்ட்டுகளை கட்டியிருக்கிறது. தங்களுக்கு நெருக்கமான அந்த நிறுவனம் கட்டிய கட்டடம் தப்பித்துவிட்டது. பார்ப்பான் கால்வாயை அகலப்படுத்தும் அரசு அதிகாரிகளின் அதிரடி நட வடிக்கையும் பாதியிலேயே நிற் கிறது. தாம்பரத்தையும் மதுரவாய லையும் இணைக்கும் புறவழிச் சாலையும் பார்ப்பான் கால்வாயின் மீதுதான் அமைந்துள்ளது. அதையும் அரசு கண்டுகொள்ள வில்லை'' என்கிறார் தாம்பரம் கணேசன்.



சென்னையைத் தாண்டியும் இதே நிலைதான். விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த மழை விவ சாயத்தைப் பெரிதும் பாதித்து விட்டது. விவசாயிகள் ஆயிரம் பேர் அழுகிய பயிர்களுடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து நிவாரணம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

மோசமாக பாதிக்கப்பட்ட திருநாவலூர் ஒன்றியத்தின் ஐந்து ஏரிகளும் மூன்று முறை உடைந் தது. மூன்று முறையும் ஏரிகளைப் பலப்படுத்தியதாக பொ.ப.துறை கணக்கு காண்பித்தது. பாதிக்கப் பட்டவர்களைக் கணக்கிட்டு நிவாரணம் தர அ.தி.மு.க. ஒ.செ. செண்பகவேல், கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார். மக்கள் காத்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் நிவாரணக் கணக்கெடுக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். "அந்த மாவட்ட வெள்ள நிவாரணத்திற்காக 300 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், இதரச் செலவுகளாக 150 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் பொதுப்பணித்துறை சொல்கிறது. முறையான கணக்கு இல்லை என சென்னையிலிருந்து ஒரு சிறப்புக்குழு வந்து கலெக்டர் சுரேஷ்குமாரின் அலுவலகத்தை சோதனை செய்துவிட்டுப் போயிருக்கிறது' என்கிறார் கள் கடலூர் மாவட்ட அரசு ஊழியர்கள்.

கலெக்டருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், ""450 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப்பட்டது என சிறப்பு அதிகாரியாக கடலூருக்கு வந்த ககன்தீப்சிங் பேடிக்கும்  பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பிஎஸ்.க்கும், மாவட்ட அமைச்சர் சம்பத்திற்கும்தான் தெரியும்னு சொல்றாரு கலெக்டர். சாப்பாட்டுக்கு 40 கோடின்னு கணக்கு காட்டுறார்'' என்கிறார்கள்.

சென்னைக்குப் பக்கத்தில் உள்ள திருவள்ளூரில் அ.தி.மு.க.வினர் ஒருசில குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் கணக்கெடுத்து அவர்களுக்கு நெருக்கமான வர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கும் வேலையை லோக்கல் அமைச்சர் ரமணா டீம் அவரது அலுவலகத்தில் உட்கார்ந்து மேற்கொள்கிறது. 5 ஆயிரத்தில் ஆயிரம் கமிஷனாம். திருநின்றவூர் பகுதியில் உள்ள பெரியார் நகரில் இன்றளவும் 5000 வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடிய வில்லை. ""ஏரியில் மீன் வளர்க்கும் பேரூராட்சித் தலைவர் ரவி, மதகுகளைத் திறந்துவிட மறுக்க... மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு கோபத்தில் தவிக்கிறார்கள்'' என்கிறார்கள் திருவள்ளூர் மாவட்ட மக்கள். 

""சென்னை நகரில் நிவாரணக் கணக் கெடுப்பில் யார் வேண்டுமென்றாலும் தங்களது பெயரை பதிவு செய்யலாம். வீடு பெறவேண்டு மென்றால் 1 லட்ச ரூபாய், பாதிப்பே இல்லாமல் வெள்ள நிவாரணத் தொகை 5,000 ரூபாய் பெற 2,500 ரூபாய் லஞ்சம் என ரேட்டை ஃபிக்ஸ் செய்து அடாவடி வசூலில் அதிகாரிகளுடன் கூட்டணிப் போட்டு அ.தி.மு.க.வினர் வசூல் வேட்டையில் இறங்கி கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டிருக்கின்றனர்'' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.

-தாமோதரன் பிரகாஷ்
சேகர், அரவிந்த், தேவேந்திரன்   nakkheeran,in

கருத்துகள் இல்லை: