பரேலி :உ.பி.,யில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை இயக்கிய
சுட்டி அப்போது, அங்கு வந்தஒரு சுட்டிக் குரங்கு, டிரைவர்
இருக்கையில் அமர்ந்தது. பின், இன்ஜினில் இருந்த சாவியை திருகியது. இன்ஜின்
இயங்கிய சத்தம் கேட்டதும், பஸ்சில் இருந்த சில பயணிகளும், குட்டித்
துாக்கம் போட்ட டிரைவரும் அலறினர். டிரைவர் வேகமாக ஓடிவந்து, குரங்கை
விரட்ட முயன்றார்.
குரங்கு, பயணிகளை அலற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திர சம்பவத்தில், இரண்டு பஸ்கள் சேதமடைந்தன.;கட்டுப்படுத்த முடியவில்லை: இங்குள்ள பரேலி நகரில், குரங்குகள் தொல்லை அதிகம். நகராட்சி அதிகாரிகள் எவ்வ ளவோ நடவடிக்கை எடுத்தும், குரங்குகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், பிலிபிட் நகரில் இருந்து பரேலிக்கு வந்த அரசு பஸ், மீண்டும் புறப்பட்டுச் செல்வதற்காக, அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் கூட்டம் வரும் வரை, சிறிது ஓய்வு எடுக்க நினைத்த டிரைவர், பஸ்சின் கடைசி இருக்கைக்கு சென்று, குட்டித் துாக்கம் போட்டார்.
பீதியடைந்த குரங்கு,தவறுதலாக, 'கியர்' கம்பியை தட்டி விட்டு, பஸ்சில் இருந்து குதித்து ஓடியது. கியர் போடப்பட்டதால், பஸ் நகரத் துவங்கியது. பீதியடைந்த பயணிகள், பஸ்சில் இருந்து குதித்தனர். பஸ்கள் சேதம்டிரைவர் வேகமாக சென்று, இருக்கையில் அமர்ந்து, பஸ்சை கட்டுக்குள் கொண்டு வந்தார். அதற்குள், முன்னாள் நின்றிருந்த இரண்டு பஸ்கள் மீது, இந்த பஸ் மோதியது. இதில், இரண்டு பஸ்கள் சேதமடைந்தன. இதுகுறித்து, உ.பி., மாநில அரசு போக்குவரத்து கழகம், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி, நகராட்சி நிர்வாகத்துக்கும் வலியுறுத்தப்பட்டுஉள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக