புதன், 30 டிசம்பர், 2015

டில்லியில் பெண்களுக்கு மட்டும் பார் ....முழுவதும் பெண்களே பெண்களுக்காக பெண்களால் BAR.

புதுடில்லி : இந்திய திருநாட்டின் தலைநகர் ஏற்கனவே கற்பழிப்பு, காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்ற விஷயங்களில் முதலிடத்தில் இருக்கிறது. இப்போது புதுமை என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் பிரத்யேக மது பார் திறந்து, நாட்டில் மற்ற நகரங்களுக்கு வழி (?) காட்டுகிறது. டில்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையிலான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் அனைத்தும் பெண்கள் மயம் தான். விற்பனையாளர், அவரது உதவியாளர், வாடிக்கையாளர் என அங்கே அனைவரும் பெண்கள் ம.ட்டுமே. மெட்ரோ ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டி, டில்லியில் தான் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. தற்போது பெண்களுக்கான முதல் மதுபானக்கடையும் திறக்கப்பட்டுள்ளது. for/ by/ of ladies


தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மதுவிலக்கு முக்கிய காரணியாக மாறியுள்ள நிலையில் விரைவில் மதுவிலக்கு வர வாய்ப்புகள் அதிகரி்த்துள்ளன. மாநில அரசிற்கு முக்கிய வருவாய் வழங்கும் துறையாக டாஸ்மாக் விளங்கி வருகிறது. மதுவிலக்கு விவகாரம், சட்டசபை தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை

பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாக பதவியேற்ற நிதீஷ் குமார், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். பின் அதில் இருந்து 'ஜகா' வாங்கினார்.
ஏற்கனவே, டில்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆண்களுக்கு நிகராக குடிக்கும் வகையில், "பெண்களுக்கு மட்டும்" மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது, பல்வேறு தரப்பு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: