திங்கள், 22 டிசம்பர், 2014

வதேரா கைது செய்யப்படலாம்? பிரியங்காவின் மோசடி கணவன் மீது சட்டம் பாய்கிறது?

சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, அரியானா மாநிலத்தில் செய்த நில முறைகேடுகளால், அவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த மாநில நில உச்சவரம்பு சட்டத்தை மீறி, 146 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரராக விளங்கும் ராபர்ட் வாத்ரா மீதான விசாரணையின் பிடி இறுகி வருவதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என, கூறப்படுகிறது. டில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆட்சியிலிருந்த, முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து, எம்.எல்.கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றது.பா.ஜ., அரசு பொறுப்பேற்கும் முன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை அம்பலப்படுத்தினார், அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அதனால், அப்போதைய காங்கிரஸ் அரசின் கோபத்திற்கு ஆளான அவர், மூன்றாண்டுகளில், பல முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  திருமணத்தின் போது, சில லட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே வைத்திருந்த வாத்ராவுக்கு இப்போது, 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளனஅதானி ஒரு 10 வருஷத்திற்கு முன்பு எப்படி இருந்தார் இப்போது எப்படி இருக்கிறார், ஒரு வேளை ஆட்சி மாறினால் சுவாமியே இந்த விஷயத்தை கிளப்புவார்
ராபர்ட் வாத்ராவின் முறைகேடுகள் குறித்து, அரியானா மாநில அரசு மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், புலனாய்வு பத்திரிகைகள் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய
வந்துள்ளன.
*'ஸ்கை லைட் ரியாலிட்டி, ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி, புளூ பிரீஸ் டிரேடிங்' என்ற மூன்று நிறுவனங்கள் சார்பில், 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் அடிமாட்டு விலைக்கு, அரியானா மாநில அரசின் ஆதரவுடன் வாங்கப்பட்டன.
*இந்த மூன்று நிறுவனங்களில், 90 சதவீத பங்குகளை, வாத்ரா தான் வைத்துள்ளார்.
*குர்கான், பரீதாபாத், மேவாட், பல்வால் ஆகிய மாவட்டங்களில் வாங்கப்பட்ட இந்த நிலங்களில், 80 ஏக்கர் நிலம், வாங்கிய சில மாதங்களிலேயே, 300 மடங்குக்கும் அதிகமான விலையில், தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன; இதில், வாத்ரா கம்பெனிகளுக்கு லட்சக்கணக்கில் லாபம் கிடைத்தன.
*இதில், பரீதாபாத் என்ற இடத்தில், 5 ஏக்கர் நிலம், சோனியா மகள் பிரியங்கா பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
*அரியானாவில், காங்கிரஸ் அரசின் ஆட்சி காலத்தில் தான், இந்த நிலங்கள் வாங்கப்பட்டுஉள்ளன. 2005 முதல், 2009 வரை, நிலங்கள் வாங்கப்பட்டுஉள்ளன.
*வாத்ரா, பிரியங்கா, மற்றும் வாத்ரா நிறுவனங்களின் பெயரில்,146 ஏக்கர் நிலங்கள் உள்ளன.அரியானா மாநில, நில உச்சவரம்பு சட்டப்படி, ஒருவர், 53 ஏக்கர் நிலத்தை தான் வைத்திருக்க முடியும். அதற்கு மேலான நிலங்களை வைத்திருந்தால், செக் ஷன் ௨௧ன் படி கைது செய்யப்பட்டு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவார். அந்த வகையில், ராபர்ட் வாத்ராவுக்கும் சிறை தண்டனை கிடைக்கும் என, அரியானா மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பலப்படுத்தியவர் அசோக் கெம்கா:ராபர்ட் வாத்ராவின் நில பேரங்களையும், முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியவர், அரியானா மாநிலத்தில் பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது என்ற தைரியத்தில், வாத்ரா நில உச்சவரம்பு சட்டத்தை மீறியதை, அசோக் கெம்கா சுட்டிக் காட்டியுள்ளார்.'அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நில முறைகேடுகள் குறித்து, நான் தெரிவித்த தகவல்களின் படி விசாரணை நடத்திய மூன்று பேர் கமிட்டி, வேண்டுமென்றே, ராபர்ட் வாத்ராவை விசாரிக்கவில்லை. அவரின் முறைகேடுகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகையில், அரியானா மாநில கமிட்டி, ராபர்ட் வாத்ராவை, சுத்தமானவர் என அறிவித்தது' என, கெம்கா கூறினார்.

ராபர்ட் வாத்ரா பூர்வீகம் என்ன?  சோனியா மகள் பிரியங்காவுடன், பள்ளியில் படித்த தோழர். பிரியங்காவும், ராபர்ட்டும், 45, கடந்த 1997ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். இருவரின் திருமணத்தின் போது, சில லட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே வைத்திருந்த வாத்ராவுக்கு இப்போது, 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன.இவரின் தந்தை மற்றும் உறவினர்கள், மத்தியில், காங்கிரஸ் ஆட்சியின் போது பல முறைகேடுகளில் ஈடுபட்டனர் என, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. சோனியா கூட, சில நேரங்களில், ராபர்ட் வாத்ரா குடும்பத்தினருடன் காங்கிரசார் நெருக்கம் காட்டக் கூடாது என, எச்சரிக்கை விடுத்தார்.ராபர்ட்டின் தந்தை ராஜேந்திர வாத்ரா, பல சர்ச்சைகளில் சிக்கியவர். 2009ல், டில்லி அருகே பண்ணை வீடு ஒன்றில்மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூத்த சகோதரர் ரிச்சர்டு வர்மா, 2003ல், தற்கொலை செய்து கொண்டார். சகோதரி 2001ல், மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்தார் தினமலர்.com

கருத்துகள் இல்லை: