அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் வெங்காயத்தின் விலை கடந்த சில
தினங்களாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தை உரிக்கும் போது வரும் கண்ணீரை விட அதன் விலை உயர்வு தாய்மார்களுக்கு அதிகமான கண்ணீரை வரவழைத்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளின் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. டெல்லி, மும்பையில் ஏற்கனவே ரூ. 80-ஐ தொட்டு விட்டது. இன்னும் சில தினங்களில் கிலோ ரூ. 100-க்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்துதான் அதிகமான வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெய்த அதிகமான மழையால் சேதம் ஏற்பட்டது. இதே போல மராட்டிய மாநிலத்திலும் வெங்காய உற்பத்தி குறைவாகவே இருந்தது. இதன் காரணமாகவே வெங்காய விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு தொடர்பாக மத்திய மந்திரிகள் சரத்பவார், கே.வி.தாமஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இதுதொடர்பாக அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசின் செயலாளர்கள் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் வெங்காய விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையிலும் 8.50 லட்சம் டன் வெங்காய உற்பத்தி இந்த ஆண்டு குறைவாகும். இதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு உடனடியாக தடை செய்யும் எண்ணம் எதுவும் தற்போது மத்திய அரசுக்கு இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக