சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசு
சகிக்காது என்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கட்சிகளைத் தடை
செய்யவும் அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக
எச்சரித்திருக்கிறார்.
தமிழக சட்டசபையில் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.எல்.ஏக்கள் கொண்டுவந்த
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் பொது
அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய கட்சிகளைத் தடை செய்யவும் அரசு
தயங்காது. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளை அரசு
சகித்துக் கொண்டிருக்காது. பாமகவினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான நட்ட
ஈட்டை அக்கட்சியினரிடம் இருந்து கோருவோம். டாக்டர் ராமதாஸ் மீது தமிழக
அரசு சார்பாக அவதூறு வழக்கு தொடரப்படும்.
வன்முறையில் யார் ஈடுபட்டாலும் தேசிய பாதுகாப்புச் சட்டமும் குண்டர்
பாதுகாப்பு சட்டமும் நிச்சயம் பாயும் என்றார் அவர்
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக