புதன், 6 ஏப்ரல், 2011

ஐலசா” நிதிசேகரிப்பு நிகழ்வு - AYELASAH is an evening of music,




  புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத்தமிழர்களால் இதுவரை பலதரப்பட்ட கலைகலாச்சார பொழுதுபோக்கு நிகழ்வுகள் பலவருடங்களாக பலதடவைகள் கனடாவின் பலமேடைகளில் நடைபெற்றுள்ளன. அவ்வாறுநடைபெற்ற நிகழ்வுகள் யாவும் குறிப்பிட்ட சமூகத்துள் அல்லது தமிழர்களுக்குள் மட்டும் என்ற ஒருவட்டத்துக்குள்ளே நடைபெற்றுவந்ததும் யாவரும் அறிந்ததே.

  இப்படியான ஒருசிறுவட்டத்துள் இருந்து அதனைவிரிவாகி பல்லினமக்களையும் ஒருங்கிணைத்து ஒருசிறப்பான நிகழ்வு கடந்து ஏப்றில் 3ந்திகதி ஞாயிற்றுக் கிழமையன்று ரொரன்ரோவில் நடைபெற்றது. கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் இரண்டாம் தலைமுறையினரான கிழக்கிலங்கையைச்சேர்ந்த இளம் பட்டதாரி மாணவர்களால் “ஐலசா”  என்ற கலைநிகழ்ச்சியுடன் கூடிய நிதிசேகரிப்பு நிகழ்வு மிகவெற்றிகரமாக நடைபெற்றதனை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.  மட்டக்களப்பும் அதன் மீளெழுர்ச்சி என்ற தலைப்பிலான விபரணப்படக்காட்சியுடன் ராஜ் லீனா கீதாஞ்சலி லீனா ஆகியோரால்  விளக்கமளிக்கப்பட்டது.

  அடுத்து கிழக்கிலங்கை மக்களின் “சமூகபொருளாதாரமீட்சி” பற்றிய தலைப்பில் சமூக சேவையாளர் திரு. அஜந்தா ஞானமுத்து அவர்கள் உரைநிகழ்த்தினார்

  தொடர்ந்து ஆபிரிக்க கலைஞர்களின் மேளவாத்திய இசையும் கவிதை நிகழ்வும், சீனப்பாரம்பரிய தற்காப்புகலை பற்றிய நாட்டிய நடனமும் நடைபெற்றன.

  மேலும் கேரளமாநிலத்தவரின் களரி பயிற்சிபற்றி நடனமும் சிங்கள மக்களின் சுதேச வாத்திய அறுவடை நடனமும் சிறப்பாக பார்வையாளர்களை கவர்ந்தன. நடைபெற்ற நிகழ்வுகளுக்கு சிகரம் வைத்ததுபோல கிழக்கிலங்கை மக்களினால் சிறப்பாக போற்றப்படும்; நாட்டுக்கூத்துஒரு வித்தியாசமான முறையில் மேடையேற்றபட்டது குறிப்பிடத்தக்கவொரு அம்சமாகும். பேராசிரியர் கலாநிதி மௌனகுரு அவர்களினால் எழுதப்பட்ட “இராவணேசன்” கூத்திலிருந்து ஒரு சிறு பகுதியாக தொகுக்கப்பட்டு இந்நவீன நாட்டிய நாட்டுக்கூத்தாக நடத்தப்பட்டமை பாராட்டிற்குரியது.

  பல்லினசமூகங்கள் வாழும் கனடாவில் முதன்முதலாக கிழக்கிலங்கைமக்களால் இந்தியா, சீனா, ஆபிரிக்கா, மற்றும் ஐறோப்பாபோன்ற நாடுகளை தாயகமாக் கொண்ட சுமார் 250க்கு மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்குகொண்டமை ஒரு சிறப்பம்சமாகும்.

  இந்நிகழ்வின் இடைவேளையின்போது இலங்கையைச்சேர்ந்த கல்விமான்களும் கனடாவிற்கான துணைத்தூதுவர்
Karunarathna Paranawithana உட்பட பலரும் தங்கள் உணர்வுகளை மனம்விட்டுப்பரிமாறிக்கொண்டதும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருந்தது.

  கீதாஞ்சலி லீனா அவர்களால் நிகழச்சிகள் யாவும் மிகவிமர்சையாக தொகுத்த வழங்கப்பட்டன. அஞ்சலா பிறிற்ரோ, நடே~; ஜெயசிங், அலெக்ஸ் ஜோசப், கீதாஞ்சலி லீனா அவர்களுடன் அமிர்தன் செபராஜா ஆகியேர் வெற்றிகரமாக இந்நிகழ்வினை நடத்தி முடித்தனர்.

  இந்நிகழிவில் சேகரிக்கப்பட்ட சுமார் கூ4000.00 டொலர்கள் வரையான நிதி கிழக்கிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்குள்ள நம்பிக்கiயான உதவிநிறுவனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளன என்பதையும் அவர்கள் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து கிழக்கிலங்கையில் ஏற்பட்டுவரும் இயற்கை அநர்த்தங்கள் மற்றும் கடந்தகால உள்நாட்டுபோரினால் பாதிப்பிற்குள்ளான தாயகத்தில் வாழும் மக்களுக்காக தம்மால் ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலினால் இந்த மாணவர்கள் தமது வரலாற்றுக்கடமையைச்சிறப்பாக செய்துள்ளனர்
.

கருத்துகள் இல்லை: