ஞாயிறு, 17 ஜூலை, 2011

ஜெயலலிதா வழக்கு : பேராசிரியர் அன்பழகன் எதிர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த சென்னையிலுள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறையினருக்கு அனுமதியளிக்க கூடாது' என, தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த அனுமதிக்க கோரி, சென்னையிலுள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை சார்பில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கேசவநாராயணா முன்னிலையில் வந்தது.  அன்பழகன் சார்பில் ஆஜரான வக்கீல் நாகேஷ்

ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்த போது, அனைத்து சாட்சிகளிடமும் மறு விசாரணை நடத்தும்படி கோரிக்கை எழுப்பப்பட்டது.

அதன்படி நடந்த விசாரணையில், சாட்சியங்கள் அனைவரும் பிறழ் சாட்சியங்களாக மாறியதால், வழக்கை திரும்ப பெற வேண்டியதாயிற்று.

தற்போதைய சொத்து குவிப்பு வழக்கில், அனைத்து சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், மீண்டும் மறு விசாரணை கோருவது சரியல்ல. இதனால் வழக்கின் தன்மையை மாற்றக்கூடியதாகும். எனவே மறு விசாரணைக்கு அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

இந்த மனு மீதான விசாரணை, ஜூலை 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், இதுவரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்பு துறை சார்பில் பங்கேற்ற வக்கீலுக்கு பதிலாக புதிய வக்கீல் நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: