ஞாயிறு, 19 ஜூன், 2011

நெடியவன் நெருக்கடியில்.....?நெதர்லாந்து அதிகாரிகள் 13 முன்னாள் புலி உறுப்பினர்களிடம் விசாரணை

புலம் பெயர் புலிகளை வளைக்கிறது நெதர்லாந்து
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நெதர்லாந்து அதிகாரிகள் 13 முன்னாள் புலி உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த விசாரணைகள் நடத்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களிடம் சில தினங்களுக்கு விசாரணைகள் நடத்தப்படும் என நெதர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளது. யார் யாரிடம் விசாரணை நடத்தப்படும் என்பது பற்றியோ அல்லது எவ்வாறான விசாரணைகள் நடத்தப்படும் என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என நெதர்லாந்து அறிவித்துள்ளது. பொதுவாக புலிகளினால் நெதர்லாந்தில் மேற்கொண்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைகளின் ஓர் கட்டமாக ஏற்கனவே 90 பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தன்னார்வ அடிப்படையில் சாட்சியங்களை அளிக்க அனுமதிக்கப்படுவதாகவும், எவரையும் கட்டாயப்படுத்தி சாட்சியமளிக்க நிர்ப்பந்திப்பதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.நோர்வேயில் நெடியவன் கைது ஐ தொடர்ந்து இந்த விசாரணைகள் முடுகிவிடபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் அடுத்த கட்டமாக கனடா, அமெரிக்கா புலிகள் சிலருடன் இரகசியமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

கருத்துகள் இல்லை: