கொடுமையான சமூக விரோதச் செயல்
கொழும்பு நகரிலுள்ள பல உணவகங் களில் சில தினங்களுக்கு முன் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்ப் பரிசோதனை நடத்தியிருக்கின்றார்கள். பல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத பண் டங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. மனித பாவனைக்கு உதவாத பண்டங்களை விற்பனை செய்த 39 உணவக உரிமையாளர்களு க்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேறு சில உணவகங்களிலிருந்து சந்தேகத்துக்கு இட மான உணவு வகைகள் மேலதிக பரிசோதனைக் காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இப் பரிசோ தனை முடிந்ததும், சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகு பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இட முண்டு.
மனித பாவனைக்கு உதவாதவை எனக் கண்டறியப்ப ட்ட உணவுப் பண்டங்களில் கொத்துரொட்டி வகை களே கூடுதலானவை. இவ்வாறான 400 கிலோ கொத் துரொட்டி வகைகள் அழிக்கப்பட்டுள்ளன. கொத்து ரொட்டி தயாரிப்பதற்கெனச் சிறியனவாக வெட்டப் பட்ட ரொட்டித் துண்டுகள் ஒரு வாரத்துக்கு மேலா கக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திடீர்ச் சோதனைகளை எப்போதோ ஆர ம்பித்திருக்க வேண்டும். காலந்தாழ்த்தியாவது ஆர ம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு தடவையு டன் நிறுத்தாமல் அடிக்கடி திடீர்ச் சோதனைகளை நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பொது சுகா தாரப் பரிசோதகர்கள் விளங்கிச் செயற்படுவார்க ளென நம்புகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக