திங்கள், 22 நவம்பர், 2010

Subramaniam Swamy திடீர் பல்டி-சட்ட அமைச்சகம்தான் தவறு செய்ததாக

Subramanian Swamyஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாக பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தையும் குறை கூறி வந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தற்போது சட்ட அமைச்சக அதிகாரிகள்தான், பிரதமருக்கு தவறான வழியைக் காட்டிவிட்டதாக பல்டி அடித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக 9 பக்க அபிடவிட் ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு கோரி நான் அனுப்பிய மனுவை சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ளது. ஆனால் சட்ட அமைச்சக அதிகாரிகளும், அரசின் சட்ட நிபுணர்களும், இதுதொடர்பான ஆதாரம் கிடைக்கும்வரை காத்திருக்கவும் என்று பிரதமருக்கு தவறான அறிவுரையை வழங்கி தாமதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நான் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரலாம் என்ற சட்ட அம்சத்தை பிரதமருக்கு தெரிவிக்க தவறிய சட்ட நிபுணர்களி்ன் போக்கு வருத்தம் தருவதாக உள்ளது.

எனது கடிதங்கள் மூலம் நான் கொடுத்த ஆதாரங்கள் குறித்து பிரதமர் தனிப்பட்ட முறையில் விசாரித்துள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத செயலாகும் என்றார் சாமி.

முன்னதாக சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பிரதமரும், பிரதமர் அலுவலகமும் செயலற்று இருந்தது தொடர்பாக கடுமையான கேள்விகளைக் கேட்டிருந்தது. இதையடுத்து அட்டர்னி ஜெனரல் வாகனாவதியை பிரதமர் சார்பில் வாதாட நியமித்த மத்திய அரசு அவர் மூலம் விரிவான பதில் மனுவை சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது நினைவிருக்கலாம்.
பதிவு செய்தவர்: சூபுன சாமி
பதிவு செய்தது: 22 Nov 2010 5:39 pm
டேய் நீ நடுவுல கொஞ்ச வருஷம் இந்த கொரங்கு வேலைய நிப்பாட்டி வச்சிருந்த இப்போ மறுபடியுமா?கண்ண கட்டுதே...போன வாரம்தான் 15 மாசமா பிரதமர் பதில் தரைலைன்னான் இப்போ பிரதமர் அப்பாவியாம்..யாரோ அவனை தப்பு வழினடதிட்டானகலாம் ..அடங்கப்பா இது அந்தர் பல்டிடா சாமி..யார் தன்ராஜா அந்த 250 சிமன்ட் பக்ஸ்...

பதிவு செய்தவர்: நோபெல் பரிசு குழு
பதிவு செய்தது: 22 Nov 2010 5:33 pm
டாக்டர் கலைஞர் கருணாநிதி is hereby conferred the Nobel Prize for Corruption for his 1.7 lakh crore corruption scandal. and for reducing Jeyalatha to the status of a mosquito

கருத்துகள் இல்லை: