திங்கள், 12 ஏப்ரல், 2010
பேருந்துகள் தட்டுமுட்டுப் பொருட்கள் நிரப்பப்பட்டு யாழ்ப்பாணத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைகின்றன
நடைபெற்று முடிந்த போரில் ஆனையிறவு பிரதான பங்கை வகிக்கிறது. இந்த யாழ்ப்பாண குடாநாட்டை , நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் இக்குறுகிய நிலப்பகுதியே இரு நிலப்பரப்புகளுக்கும் இணைப்பை உண்டாக்கும் பகுதியாகும். யுத்த முரண்பாடுகள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து வட பகுதியை முற்றுமுழுதாக யுத்தத்தின் கடைசிக்காலம் வரை பிரித்துவைத்திருந்தத
யாழ்ப்பாணத்துடன் இணைப்பை உண்டாக்கும் ஏ9 பாதை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட 7 மாதங்கள் எடுத்தது. ஜனவரி மாதம் தொடக்கம் மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அதிகரித்திருந்தது. நாகதீப விகாரையின் பிரதமகுரு சாஸ்திரவெடி ஸ்ரீ விமலதேரோ கூறியதாவது ;வார இறுதியில் 200,000 பேர் வரை இங்கு வருவார்கள். நாகவிகாரை யாழ்ப்பாணத்திற்கப்பாலுள்ள தீவொன்றில் உள்ளது. இப்பகுதியை வந்தடைய 20 நிமிட வள்ளப் பயணம் செய்யவேண்டும்.அந்தக் குரு உணர்வதாவது; பொதுமக்களிடையே ஏற்படும் தொடர்பாடல்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தமிழ்மக்களுக்கும் இடையிலான மனப்புண்களை ஆற்றுவதற்கு வழிவகுக்கும் .யுத்தம் இவர்களை சேரவிடாது தடுத்துவைத்திருந்தது. பொதுமக்களிடையே தொடர்பாடல்கள் இருக்கவில்லை. இதனை அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக்கூறினார்.
. "கடந்த 2 மாதங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் வடபகுதியைத் தரிசித்துள்ளனர். இது நிச்சயமாக வடபகுதித் தமிழ்மக்களுக்கிடையேயும் தென்பகுதி சிங்கள மக்களுக்கிடையேயும் பரிந்துணர்வை வளர்க்கும் என்றும் அவர் கூறினார். ஏ9 வீதிக்கு அருகாமையிலுள்ள யுத்த காலநினைவுச் சின்னங்களை அவர்கள் பார்க்கின்றனர். ஒரு புறத்தில் ஒரு புல்டோசர் நிறுத்தப்பட்டுள்ளது . 1991 இல் ஒரு படைமுகாமைத் தாக்க புலிகள் அதை உபயோகித்துள்ளனர். அதனை ஒரு படைச்சிப்பாய் குண்டு வைத்துத் தகர்த்துள்ளார். அது இப்போது ஒரு யுத்த சின்னமாகும். பலர் அதைச் சூழ்ந்து நின்று பார்க்கின்றனர்.
அடுத்த பக்கத்தில் இன்னும் இரண்டு யுத்த வாகனங்கள் ஒரு டிறாக்ரரும் ஒரு பிக்கப்பும் நிறுத்தப்பட்டிருந்தன . துப்பாக்கிச் சன்னங்கள் அவற்றைத் துளைத்திருந்தன. பார்வையாளர்கள் இந்த 3 வாகனங்களையும் படமெடுத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகிறார்கள்
பல வாரங்களுக்கு முன்னரேயே ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டுவிடும். . மக்கள் தொகையினரிடமிருந்து பணம் கறக்க வர்த்தகர்கள் பல வழிகளைக் கையாளுகின்றனர். யுத்தத்தினால் அழிந்த வீடுகளைத் திருத்தி மிகக் குறைந்த வசதிகளுடன் வாடகைக்குக் கொடுக்கின்றனர். உணவகங்களும் கடைகளும் வார இறுதியில் நல்ல வருமானம் பெறுகின்றனர். இக்காலகட்டத்தில் பல இந்திய பேருந்துகள் தட்டுமுட்டுப் பொருட்கள் நிரப்பப்பட்டு யாழ்ப்பாணத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைகின்றன.
ஆனால் , மக்களுக்கிடையேயுள்ள இடைவெளியை அடைக்கப் பல நாட்கள் எடுக்கும். கடைத்தெருக்களில் விற்பனை செய்யும் பலருக்கு வாங்குவோரது பாஷை விளங்குவதில்லை " . விற்பனை செய்வோர் தமிழ் பேசுகின்றனர். அவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் கலந்து சமாளிக்கின்றனர். சைகைப் பாஷையும் பேசப்படுகிறது.நாங்கள் நீண்டகாலம் பிரிக்கப்பட்டிருந்ததனால் ஆரம்ப நிலையிலிருந்து பழக வேண்டியுள்ளது என்கிறார் வடமத்திய மாகாணத்தில் எப்பவாலாவைச் சேர்ந்த சரத் ரத்னசிறி.
சில தமிழ்க்கட்சிகளுக்கு சிங்கள மக்களது படையெடுப்புப் பற்றி ஆட்சேபனை இருப்பினும் இருசாராரிடையேயும் பகையுணர்வு காணப்படவில்லை. யாழ் .வாசியான பத்மநாதன் சுயாந்தேரன் கூறுவதாவது;தெற்கிலிருந்து மக்கள் வருதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது வழமை நிலையைக் கொண்டுவர உதவும். யாழ்ப்பாணம் பல அழிவுகளைச் சந்தித்த பின்னர் இதனால் கிடைக்கக்கூடிய வருமானத்தைப் பற்றியும் சிலர் மகிழ்வெய்துகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் அழிவடைந்த கட்டிடங்கள் உளவாயினும் வன்னியில் நிலைமை மிக மோசமானது. அங்கு 2006 - 2009 வரை நடைபெற்ற யுத்தத்திற்குத் தப்பிய கட்டிடங்கள் ஒன்றுமேயில்லை. ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி 280,000 புலம்பெயர்ந்த மக்களில் 190,000 பேர் தமது கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர். 160,000 வீடுகள் திருத்தப்பட வேண்டியுள்ளன. எல்லாமாக 70,000 மக்கள் யுத்தத்தில் மாண்டுபோயினர். இது விடுதலைப் புலிகள் தனிநாடு வேண்டிய நடத்திய பேரினாலாகும். பிஷப் சௌந்தரநாயகம் கூறுவதாவது ;முன்னர் இருந்ததிலும் பார்க்க இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் படையினர் உள்ளனர். ஆயினும் சோதனை நடவடிக்கை குறைவடைந்துள்ளது. யுத்த பிரசன்னம் நீக்கப்பட்டுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு குறைவடைந்து வருகிறத
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக