திங்கள், 5 ஜூலை, 2010

கனடாவின் ஸ்க்ராபோ எஸ்.பி என்ற பல்பொருள் அங்காடியின் உரிமை தொடர்பில் சர்ச்சை

S.P.Importers???    S.P.Thamilselvan. The liberation industry in a huge mess.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சொத்துக்கள் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவின் ஸ்க்ராபோவில் காணப்படும் எஸ்.பி என்ற பல்பொருள் அங்காடியின் உரிமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
மறைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் சகோதரிக்கும், குறித்த பல்பொருள் அங்காடியின் தற்போதைய உரிமையாளர் கிருபாகரனுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக குறித்த பல்பொருள் அங்காடியை தாம் நிர்வகித்து வருவதாகவும் இதன் உரிமையை எவருக்கும் கொடுக்கப் போவதில்லை எனவும் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கனேடிய புலி வலையமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திவயின குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: