சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,
இந்தியாவிலேயே தலைசிறந்த நீதியரசர்களையும், புகழ் பெற்ற வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தான் நுழைவு வாயிலாக உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 153 புதிய நீதிமன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. 190 சிவில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிது புதிதாக நீதிமன்றங்கள் கட்டப்படுவதுடன் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் வழக்குகள் குறைந்தபாடில்லை. வளரும் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிகத்தான் செய்யும்.
சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் 14,160 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு விரைந்து தீர்வு காண்பதற்குத்தான் இந்த விடுமுறை கால நீதிமன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள். அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன. ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும். இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றார் துரைமுருகன்.
பதிவு செய்தது: 10 Jul 2010 5:05 pm
இதை முன்னாடிஎசெய்திருக்கலாமே ரொம்ப லேட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக