இலங்கை ில் இருந்து தப்பித்துச்சென்று மலேசிய முகாம்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர் 75 ஈழத்தமிழர்கள். இவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளது ஐநா. ஆஸ்திரேலியாவின் புதிய அரசு மலேசிய முகாம்களில் வாடும் இந்த 75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளத்தயார் என்ற முடிவில் இருக்கிறது.
இதேபோல் நார்வே அரசாங்கமும் இவர்களை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கிறது. ஆகவே புலம் பெயர்ந்திருக்கின்ற தமிழர்கள் இந்த அரசுகளை எங்களை அழைத்துக்கொள்ள கோரிக்கை எழுப்பினால் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும்.
நாங்கள் எந்த எண்ணத்தில் புறப்பட்டோமோ அது நிறைவேறும். எங்கள் குழந்தைகளின் படிப்பு தொடர்வதற்கு வசதியாக இருக்கும்.
காலதாமதப்படுத்தும் போது நாங்களும், எங்கள் குழந்தைகளும், பெண்களும், வாடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகளின் கல்விக்காவது எங்களை அழைக்கச்செய்யுங்கள் என்று நக்கீரன் இணையதளம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக