நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் பத்தாவது மற்றும் பிளஸ்டூ மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 31வது ஆண்டு பரிசளிப்பு விழா இன்று காலை சென்னை பிலிம்சேம்பர் அரங்கில் நடந்தது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற 55 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவக்குமார் பேசும்போது, ‘’1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிவக்குமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து தன்னால் முடிந்த கல்வி வளர்ச்சி உதவிகளை செய்துவந்தது.
25 ஆண்டுகள் முடிந்தபிறகு எனது பிள்ளைகளான சூர்யா, கார்த்தி ஆகியோர் அந்தப்பணியை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகிறார்கள்.
55 பேரில் மாற்றுத்திறனாளிகள் 8 பேரும், தமிழக அகதிமுகாம்களில் வசிக்கும் ஏழை ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் 7 பேரும்,மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 5 பேரும் அடங்குவர்.
இலங்கையில் வாழ்வைத்தொலைத்து தமிழகத்தில் அகதிமுகாம்களில் துன்பப்படுகின்ற ஈழத்தமிழர்களின் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டும் உதவி செய்வதை அகரம் பவுண்டேசன் கடமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக