பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள், விளையாட்டுத்திடல்கள், சுற்றுச் சுவர்கள் இல்லை. மழைக்காலங்களில் பள்ளிகளுக்குள் குடை பிடிக்கும் நிலை. இதில் எல்லாம் தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை.
சமச்சீர் கல்வி திட்டம் என்றால் என்ன? பெருநகரங்களில் வாழும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் கல்வியைப்போன்று குக்கிராமத்தில் உள்ள ஏழைப்பிள்ளைகளுக்கும் அளிப்பதே சமச்சீர் கல்வியாகும்.
அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரே பாடப்புத்தகத்தை அச்சடித்துத் தந்து விட்டு இதுதான் சமச்சீர் கல்வி திட்டம் என்று அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
அந்த பாடப்புத்தகங்களை வசதி படைத்த வீட்டுப்பிள்ளைகள் எளிதாக படிக்க முடியும். ஆனால் ஏழைகள் வீட்டுக் பிள்ளைகளுக்கு அதை கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லை. என்னுடைய தொகுதி விருத்தாசலம் என்பதால் இவ்வாறு புறக்கணிக்கப்படுகிறதா?
இதன் பிறகாவது அரசு விருத்தாசலத்தில் மட்டுமல்லாமல் தமிழ்கம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து தகுந்த வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
பதிவு செய்தது: 04 Jul 2010 5:36 pm
அதிமுக அணிக்கு வர வேண்டுமா? நானா ? என்னை பார்த்து இந்த ஜெயலலிதா வெறிகாரன் குடிகாரன் என்று திட்டியவர் இவருடன் கூட்டணிவைத்தால் எனக்கும் வைக்கோவின் நிலைதான் ஏற்ப்படும் ! இல்லை இல்லை ! நான் ஒருவருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுடன் தான் என் கூட்டணி இருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக