கௌரவ கொலைகளை தடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்ட வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 26ஆம் தேதி கூட உள்ள மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதியினர், காதலர்கள் ஆகியோரை கொலை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய தண்டனை சட்டப் பிரிவில் முன்னுரை திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எவையெவை கொலையாக கருதப்படும் என்பது பிரிவு 300இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி பிரிவு 354ன் கீழ் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் தண்டனையாக கருதி 2 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே குற்றவாளிகள் எளிதில் தப்பும் சூழல் உள்ளது.
ஆனால் சட்டத்திருத்ததின்படி கௌரவ கொலைகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக