முன்னாள் பிரதியமைச்சர் சந்தன கத்திரிஆரச்சி சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையொன்றின்போது நீதிமன்ற வளாகத்திற்குள் காணப்பட்ட ஒருவர், மந்திரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப
நேற்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது மந்திரவாதியொருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்திருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிபதியிடம் கோரினார்.இதையடுத்து முனகமகே டொன் குணவர்தன என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டார்.
இதேவேளை, இவ்வழக்கு தொடர்பான ஜூரிகள் சபையின் தலைவருக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஜூரிகள் சபையின் தலைவர் தனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்ததையடுத்தே இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக