வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. வடக்குகிழக்கு இணைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அரசமைப்புத் திருத்தம் மேற்கொள் ளப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் முஸ்லிம்களின் கோரிக்கைகளும் அரசமைப்பில் உள்ளடக் கப்பட வேண்டும்.
குறிப்பாகத் தேர்தல் முறைமை திருத் தப்படும் போது சிறுபான்மை இனம் அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
நிரந்தர அரசியல் தீர்வொன்று எட்டப்படும் போது முஸ்லிம்களின் நலன் அதில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்கள் பாதிக்கப்படாதவாறே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றது. இதை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காது.
கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு இந்தியாவில் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துவிட்டு இங்கு வந்து முஸ்லிம்களுடன் பேசவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.
கூட்டமைப்பின் இந்த இரட்டை நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது.
வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கும் உரிமை கூட்டமைப்புக்கு இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் இணைப்புக்கான நடவடிக் கையை மேற்கொள்வார் என்று நாம் நம்பவில்லை.
1987இல் செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூட முஸ்லிம்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. அவர்களுக்குத் தெரியாமலேயே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முற்பட்ட போது கூட அதை நாம் எதிர்த்தோம். அது முஸ்லிம்களைப் பாதிக்கும் என்றோம். எமது கோரிக்கையையும் மீறி ஒப்பந்தம் செய்ததால் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டோம். ஆகவே, முஸ்லிம் சமூகத்துடன் பேசியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக