வெள்ளி, 9 ஜூலை, 2010

சூரிய சக்தியில் இயங்கும் ் விமானமொன்று முதல் தடவையாக

சூரிய சக்தியில் இயங்கும் பாரிய கிளைடர் விமானமொன்று முதல் தடவையாக இரவு நேரத்தில் சூரியசக்தியில் மாத்திரம் பறந்து சாதனை படைத்துள்ளது. சுவிற்சர்லாந்தில் நேற்று வியாழனன்று இச்சாதனைப் பறப்பு இடம்பெற்றது. 26 மணித்தியாலங்கள், 9 நிமிடங்கள் இவ்விமானம் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஒளியே இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விமானத்தின் அகலம் ஏ340 எயார்பஸ் ரக விமானங்களின் அகலத்திற்குச் சமமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரலாற்றில் சூரியசக்தியில் பறந்த மிகப்பெரிய விமானமாகவும் இது விளங்குகின்றது.
தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப் பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது என இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு வாயுபலூன் மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விமானப் பயணத்தின் போது இணை விமானியாக செயற்பட்ட அந்ரே போர்ஸ்ச்பேர்க் கருத்துத் தெரிவிக்கையில் “இச்சாதனையை இன்னும் நம்பமுடியாதுள்ளது. நாம் எதிர்பார்த்ததைவிட இப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நாம் இன்னும் நீண்டதூரம் பயணம் செய்யவிருந்தோம். ஆனால் நாம் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டதால் திரும்பி வந்துவிட்டோம்” எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: