செவ்வாய், 6 ஜூலை, 2010

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்?

செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிரினம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கனடாவில், மீத்தேனை உற்பத்தி செய்யும் மீத்தேனோஜெனிக் பாக்டீரியா காணப்படும் ஓர் ஓடை உள்ளது. அது செவ்வாய்க் கிரகத்தின் முந்தைய, தற்போதைய ஓடைகளைப் போலத் தோன்றுகிறது. எனவே செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிரினம் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கனடாவின் ஆக்ஸல் ஹீபர்க் தீவில் அமைந்துள்ள அந்த ஓடையில் பெரிய பெரிய மீத்தேன் குமிழ்கள் எழும்பி வந்தது ஆராய்ச்சியாளர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. அந்த மீத்தேன் வாயு புவியியல் ரீதியாக உருவாக்கப்பட்டிருக்குமா அல்லது நுண்ணுயிரினத்தால் உருவாக்கப்பட்டிருக்குமா என்று கண்டுபிடிக்க நினைக்கிறார்கள்.
அந்த லாஸ்ட் ஹாம்மர் ஓடையில் காணப்பட்ட நுண்ணுயிரினமானது காற்று தேவைப்படாததாக இருந்ததை அறிந்து நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். அது? மீத்தேனை உண்டு, ஆக்சிஜனுக்குப் பதிலாக சல்பேட்டை சுவாசித்து உயிர் வாழ்ந்திருக்கிறது என்கிறார் வைற். மீத்தேனும், உறைந்த நீரும் மிகச் சமீபமாகத்தான் செவ்வாய்க் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கானமூலம்கண்டுபிடிக்கப்படவில்லை.
கனடாவின் லாஸ்ட் ஹாம்மர் தீவைப் போன்ற மிகக் கடினமான சூழல்தான் செவ்வாய்க் கிரகத்திலும் காணப்படுகிறது. பூமியில் நாம் அறிந்ததிலேயே லாஸ்ட் ஹாம்மர் தீவுதான் மிகவும் குளிரும் உப்புமான சூழ்நிலையைக் கொண்ட இடமாகும். இது செவ்வாய்க் கிரகம் போன்ற ஊர் உறைந்த உலகத்தில் எப்படி மீத்தேன் கசிவு ஏற்பட முடியும் என்பதற்கான மாதிரியாகத் திகழ்கிறதுஎன்று லைல் வைட் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை: