வெள்ளி, 9 ஜூலை, 2010

உலகின் முதல் முழு முகமாற்று ஆபரேஷன்: பிரான்ஸ் டாக்டர்கள் சாதனை

பாரீஸ்: பிரான்சை சேர்ந்த டாக்டர் லாரண்ட் லான்டியரி உலகிலேயே முதன்முறையாக முழு முகமாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜெரோம் என்ற 35 வயது நபருக்கு இந்த முழு முகமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜெரோமின் முகம் மரபணு கோளாறால் அகோரமாக இருந்தது.

இதையடுத்து டாக்டர் லாரன்ட்டை அணுகி தனது முகத்தை மாற்ற ஆபரேஷன் செய்வது குறித்து விவாதித்தார் ஜெரோம். இதையடுத்து டாக்டர் லாரண்ட் தலைமையிலான குழு இறந்து போன ஒருவரின் முகத்தை எடுத்து இவருக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளது.

இந்த ஆபரேஷன் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள ஹென்றி-மான்டர் மருத்துவமனையில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடந்தது.

இது குறித்து டாக்டர் லாரன்ட் கூறுகையில்,

புதிதாக பொருத்தப்பட்டுள்ள முகம் நோயாளியின் எலும்பு அமைப்போடு ஒன்றிவிடும். ஆபரேஷன் செய்யப்பட்டவர் நன்றாக உள்ளார். மேலும், அவர் தற்போது நன்றாக நடந்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார் என்றார்.

கருத்துகள் இல்லை: