வெள்ளி, 9 ஜூலை, 2010

நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுகிறார்.


நித்யானந்தா மீண்டும் சொற்பொழிவு ஆற்றப்போகிறாராம்!

நடிகை ரஞ்சிதா -  நித்யானந்தா வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து  நித்யானந்தா தலைமறைவானார். கர்நாடகா சி.ஐ.டி., போலீசார், ஏப்ரல் 21ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்தனர். ஏப்ரல் 30ம் தேதி வரை பெங்களூரில் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.
ஏப்ரல் 30ம் தேதி நித்யானந்தாவை ராம்நகர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.தனக்கு ஜாமீன் வழங்க கோரி, நித்யானந்தா, கர்நாடகா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 
’ஒரு லட்சம் ரொக்கம் ஜாமீன், இரு நபர் ஜாமீன், ராம்நகர் போலீஸ் நிலையத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும், போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
 தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வரை ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த கூடாது’’ என்ற நிபந்தனையின் பேரில் கர்நாடகா ஐகோர்ட்  ஜாமீன் வழங்கியது.

நித்யானந்தாவை ஜாமீனில் விடுவிக்கும்போது விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தளர்த்தியுள்ளது.
ஆன்மீக சொற்பொழிவாற்ற விதிக்கபட்டிருந்த தடை  விலக்கப்பட்டதால், வரும் 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவாற்ற உள்ளாராம்.
இதையடுத்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக, ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுகிறார். இதில் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்களாம்.

கருத்துகள் இல்லை: