திங்கள், 5 ஜூலை, 2010

சந்திரிக்கா குமாரணதுங்காவை ஜ.தே.க.யில் இணைக்க முயற்சி!

தேசியப் பட்டியல் எம்.பியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கசிகின்றன. இதன் மூலம் ஜனாதிபதி மீது அதிருப்தியடைந்திருக்கும் ஸ்ரீ.ல.சு.க. பிரமுகர்களைத் தம்வசப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க பிரமுகர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவும் இது தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரிகாவை ஐ.தே.கவில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசில் அதிருப்தி அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர்கள் பலரையும் தம்வசப்படுத்தி விட முடியும் என்று இச்சந்திப்பில் மங்கள சமரவீர எம்.பி தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்ல. ஒருவர் ஜனாதிபதியாக மூன்று முறை பதவி வகிக்கலாம் என அரசமைப்பில் திருத்தம் ஒன்று கொண்டு வரப்படவிருப்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவை நிறுத்தக் கூடிய சாத்தியக்கூறு குறித்துக் கருத்தாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரு தரப்பும் வெகுவிரைவில் சந்திரிகாவைச் சந்திக்கவிருப்பதாகவும்இ ஐ.தே.க. தேசியப்பட்டியல் எம்.பியாக அவரை இணைப்பது பற்றிக் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இணக்கப்பாட்டையடுத்தே இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மங்கள சமரவீர, தமது ஆதரவாளர்கள் சகிதம் ஐ.தே.கவில் இணைய உள்ளார் என்பது ஏற்கனவே கசிந்த தகவல்.

கருத்துகள் இல்லை: