திங்கள், 5 ஜூலை, 2010

M.G.R க‌ல்லூ‌ரி மாணவ‌ர் அடி‌த்து கொலை ,க‌மிஷ‌ன் பெறுவ‌தி‌ல் தகராறு

செ‌ன்னை மதுரவாய‌‌லி‌ல் உ‌ள்ள எ‌ம்.‌ஜி.ஆ‌‌‌ர் பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌த்து வ‌ந்த வடமா‌நில‌த்தை சே‌ர்‌ந்த மாணவ‌ர் ஒருவ‌ர் மாணவ‌ர்களா‌ல் அடி‌த்து கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
ஜா‌ர்‌க்க‌ண்‌ட் மா‌நில‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர் மாணவ‌ர் குமா‌ர் ‌சி‌ங். இவ‌ர் செ‌ன்னை மதுரவாய‌‌லி‌‌ல் உ‌ள்ள எ‌ம்.‌ஜி.ஆ‌ர். பொறி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌‌த்து வ‌ந்தா‌ர்.
இத‌னிடையே வடமா‌நில மாணவ‌ர்களை க‌ல்லூ‌‌ரி‌யி‌ல் சே‌ர்‌த்து க‌மிஷ‌ன் பெறுவ‌தி‌ல் ச‌த்‌யபாமா பொறி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌க்கு‌ம், எ‌ம்.‌‌ஜி.ஆ‌ர் பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌க்கு‌‌ம் இடையே தகராறு ஏ‌ற்ப‌ட்டு அது மோத‌லாக வெடி‌த்தது.
நே‌ற்‌றிரவு நட‌ந்த மோத‌‌லி‌ல் எ‌ம்.‌ஜி.ஆ‌ர். பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர் குமா‌ர்‌சி‌ங்கை, ச‌த்யபாமா பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் அடி‌த்து‌க் கொ‌ன்றன‌ர்.
மாணவ‌ர் குமா‌ர்‌சி‌ங்கை அடி‌த்து‌க் கொ‌ன்றவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க வ‌லியுறு‌த்‌‌தி ‌நீலா‌‌ங்கரை காவ‌ல்நிலைய‌த்த‌தை மு‌ற்றுகை‌யி‌ட்டு மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.
மாணவ‌ர்களை சமாதான‌ப்படு‌த்‌திய கா‌வ‌ல்துறை‌‌யின‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌‌மீது நடவடி‌க்கை எடு‌‌ப்பதாக உறு‌திய‌ளி‌த்தன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து மாணவ‌ர்க‌ள் கலை‌ந்து செ‌ன்றன‌ர்.
இத‌னிடையே மாணவ‌ர் குமா‌ர்‌சி‌ங்கை அடி‌த்து‌க் கொ‌ன்ற ச‌த்யபாமா க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

கருத்துகள் இல்லை: