வியாழன், 8 ஜூலை, 2010

ஐ.நா. அலுவலகம் மீதான முற்றுகை

ஐ.நா. அலுவலகம் மீதான முற்றுகை முட்டாள்தனமானது என்கிறது ஹெல உறுமய
ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கும் அதன் ஊழியர்களுக்கும் தற்போதைய நிலையில் இடையூறு ஏற்படுத்துவது முட்டாள் தனமான நடவடிக்கையாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த தேரர் கூறியுள்ளார். ஐ.நா. பல அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கான நிபுணர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனே நியமித்தார். அதனால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர் அவரே தவிர ஐ.நா. அமைப்பல்ல என டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார். "தற்போதைய நிலையில் நாம் எதிர்காலம் குறித்து புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நடவடிக்கையில் ஈடுபடும்போது நாம் எமது எல்லைக்குள் நின்றுகொண்டு அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்" என அவர் கூறினார். "இலங்கை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டியுள்ளது. எனவே ஏனைய நாடுகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது கவனமாகச் செயற்பட வேண்டும்"  எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: