Shalin Maria Lawrence :
அண்ணலின் மிக முக்கியமான "சாதியை அழித்தொழித்தல்" நூல் பதியப்பட்டு வெளியான நாள் இன்று "15th May 1936. முதல் பிரதியின் விலை எட்டனா.இந்த புத்தகம் ஏன் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதற்கு பின்னால் அந்த புத்தகம் வெளியான சூழ்நிலையும் அதற்கு பின் இருந்த வரலாறும் நாம் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
1936ம் ஆண்டு ஜாட்-பட்-தோடக் மண்டல் என்கிற ஹிந்து மத சீர்திருத்தவாத
அமைப்பு லாகூரில் நடத்தயிருந்த தங்களின் ஆண்டு விழா மாநாட்டில் அம்பேத்கரை
தலைமை தாங்கி உரைநிகழ்த்த அழைக்கிறது. பெயரில் மட்டுமே சீர்திருத்தத்தை
வைத்திருந்த அந்த அமைப்பில் சாதி வெறியும், மூட நம்பிக்கைகளும் வேரூன்றி
இருந்தது. அந்த அமைப்பில் அதுவரை ஒரு தலித் கூட இடம்பெறவில்லை. அவர்கள்
அழைத்த முதல் தலித் அம்பேத்கர்தான் .
விழாவிற்கு முன்னால் அம்பேத்கரின் உரையை எழுத்து வடிவமாக அவரிடம் கேட்டுவாங்கிய அதன் தலைவர்கள் அந்த உரையை படித்து அதிர்ந்துபோனார்கள். உரையில் சாதி ஒழிப்பும், மதவாத எதிர்ப்பும், எழுச்சியும் நிறைந்திருந்தது .வேதங்களையும் புராணங்களையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்திருந்தார் அம்பேத்கர் அவர்கள் அந்த உரையில்.
உரையின் பிரதியை படித்து பார்த்த தலைவர்கள் அவற்றில் பல இடங்களில் மாற்றம் செய்து அம்பேத்கரை பேச நிர்பந்திக்கிறார்கள்.