தினமலர் : மதுரை : திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில் , அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன . நீதிபதி ஜி . ஆர் . சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என , தனி நீதிபதி ஜி . ஆர் . சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார் .
இந்த வழக்கில் இன்று ( ஜனவரி ஆறு ) காலை , பத்து மணி முப்பது நிமிடங்கள் மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் , கே . கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது
: கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்துாண் உள்ளது . தீபத்துாணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது . தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் . சண்டை போடக்கூடாது
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது . அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன
இவ்வாறு இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது
செய்தியை கேட்டதற்கு நன்றி . தொடர்ந்து செய்திகளை கேட்க தினமலர் இணையதளம் மற்றும் தினமலர் மொபைல் ஆப் ஆகியவ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக