சனி, 10 ஜனவரி, 2026

இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்தம் ; நான்கு மாவட்டங்களுக்கு ' ஆரஞ்ச் அலெர்ட்'

 தினமலர் :சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , இன்று இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது . திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , கடலுார் மாவட்டங்களில் மிக கன மழைக்கான , ' ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது . வானிலை மையத்தின் அறிக்கை
 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது
நேற்று காலை நிலவரப்படி , இலங்கையில் மட்டக்களப்புக்கு கிழக்கு , தென்கிழக்கில் , நூற்று எழுபது கி . மீ . , தொலைவிலும் , சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் , எழுநூற்று பத்து கி . மீ . , தொலைவிலும் நிலவியது



இது , வடமேற்கு திசையில் நகர்ந்து , வடக்கு இலங்கையில் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே , இன்று மாலை கரையை கடக்கக்கூடும் . தெற்கு கேரள கடலோர பகுதிகள் , அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் , ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

இதன் காரணமாக , தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் , உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி , மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது . கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்

திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , கடலுார் மாவட்டங்கள் , புதுச்சேரி , காரைக்காலில் , இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . இதற்கான , ' ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , அரியலுார் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களில் , இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , ராணிப்பேட்டை , வேலுார் , திருவண்ணாமலை , விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் , நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது . தமிழக கடலோர பகுதிகள் , மன்னார் வளைகுடா , குமரிக்கடல் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் , மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை: