வியாழன், 9 ஜனவரி, 2025

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷப்பிரியா கொலைக்குற்ற சாட்டில் எப்படி சிக்கினார்? நிமிஷப்ப்ரியாவின் அம்மா கூலித்தொழிலாளி மகளை மீட்க போராடுகிறார்

May be an image of 1 person and text

Loganayaki Lona  :   நிமிஷப்பிரியா கேரளாவின் பாலக்காட்டைச்சேர்ந்த செவிலியர்.
2008 இல் ஏமனில் செவிலியராக பணி செய்ய செல்கிறார்.
அங்கு வேலை பார்த்த அனுபவ அடிப்படையில் சுய தொழிலாக  க்ளினிக் தொடங்க நினைத்தார்.
கணவரும் ,குழந்தையும் பொருளாதார போதாமையால் கேரளா திரும்பிவிட அவர் மட்டும் அங்கு பணி செய்தார்
.அங்குள்ள சிட்டிசனோட ,பார்ட்னராகத்தான் தொழில் தொடங்க வேண்டும் என ,இடையில் ஒரு  குடும்ப நண்பர் தலால் மஹதி என்பவர் தன்னோடு சேர்ந்து தான் தொழில் செய்ய முடியும் என்கிறார்.
ஆனால் நிமிசப்ப்ரியாவுடன் இன்னொரு நண்பர் இணைந்து க்ளினிக் துவங்கப்பட்டது.


அந்த documents இல் மூன்றாவது பார்ட்னராக தலால்மஹதி தன்னை சேர்த்ததை இவர்களுக்கு தெரியவில்லை.
அந்த மொழியில் நிமிஷப்ப்ரியாவுக்கு தெளிவில்லாமல் இதை கவனிக்கத்தவறுகிறார்.
2015 இல் ஏமன்ல போர்ச்சூழல் வரவே இந்தியர்களை ஏமன் சொந்த நாட்டுக்கு அனுப்பியது.பணத்தை இதுல invest செய்ததால் அப்போதும் அவர் வரவில்லை.

போர்ச்சூழலை பயன்படுத்த நினைத்த தலால்மஹதி இவருடைய பங்குகளை தனது அக்கவுண்ட்ல சேர்க்கிறார்.இவரது பாஸ்போர்ட்டை திருடிவிடுகிறார்.இவர் புகைப்படத்தை மார்பிங் செய்து தனது மனைவியெனக்காட்ட முயற்சி செய்ததாக தகவல்கள் உள்ளன.உடல் ரீதியாக துன்புறுத்துகிறார்.பாலியல் தொந்தரவுகள் என நிமிசப்ப்ரியா இந்தியாவிலிருந்து ஏமனில் தன் பணியிடத்தில் ஏமன் சிட்டிசனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருக்கிறார்.

தப்பித்தே தீர வேண்டிய கொடுமைகளுக்குள் சிக்கிவிட்டார்  என்பதால் ,அவனுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை மீட்டு எப்படியாவது சவுதி வழி இந்தியா வர திட்டமிடுகிறார் நிமிஷப்ப்ரியா. க்ளினிக்கிலிருந்து இன்னொரு செவிலியர் உதவியோடு ஒரு ஷார்ட் செடேட்டிவ்  அவனுக்கு கொடுத்தனர்.மயங்கவில்லை என்பதால் அருகிலிருந்த செவிலியர் இன்னொரு ஷார்ட் கொடுக்கிறார்.தலால் மஹதி செத்துட்றான்.இன்னொரு பெண்ஏமன் சிட்டிசன்.அவர்க்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கின்றனர்

இறந்ததும் அந்தப்பெண் துண்டு துண்டாக வெட்டி பேக் செய்து டிஷ்போஸ் செய்கிறார்.நிமிஷப்பிரியா தன் பாஸ்போர்ட்டுடன் சவுதி வரை பயணிக்க சவுதியில் கைது செய்யப்படுகிறார்.
அனைத்து மலையாள மீடியாக்களும் கணவரைக்கொன்ற மலையாள நர்ஸ்க்கு ஏமன் கோர்ட் மரண தண்டனை   என ஊடகச்செய்தி வாசித்தன.மக்கள் மனதில் கண்வனைக்கொன்றதால் தண்டனை என கரைந்து போனது.

அங்கு போர்ச்சூழலில் ஆட்சி அதிகாரம் யாரிடம் என்பதே குழப்பமான சூழலில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.பாதிக்கபட்ட பெண் தற்காப்பு கருதி செய்த கொலை என கருணை அடிப்படையை அனைத்து கோர்ட்டிலும் முன் வைக்கின்றனர்.ஆனால் ஏமன் சிட்டிசனை ,இந்திய சிட்டிசன் கொலை என்பதாக வழக்கின் போக்கு இருந்துள்ளது.

நிமிஷப்ப்ரியாவின் அம்மா கூலித்தொழிலாளி இப்போது ஏமனுக்கு சென்று தன் மகளை மீட்டு  அழைத்து வர போராடுகிறார்.அவர் போராட்டம் வெல்லட்டும்.

பத்திரிக்கையாளர் தன்யாராஜேந்திரன் நிமிஷப்ப்ரியாவுடன் போனில் பேச அனுமதி பெற்று அதன்பின்னரே வழக்கின் போக்கை மாற்றி இப்போது இந்தியா ,ஈரான் போன்ற நாடுகள் அவர் இதிலிருந்து விடுபட ஆதரவளிக்கின்றன.

கருத்துகள் இல்லை: